முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
முருகன் அருள்புரிதல்50 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

முருகன் அருள்புரிதல்

நொண்டிச் சிந்து✓
வாழ்த்துரையில் மகிழ்ந்த கந்தன் — வானில்
மன்னுமப்பன் அம்மைதன்னை யஞ்சலிசெய்து
ஏத்திநின்ற வேடு வர்க்கு — பெருமான்
ஈராறு கண்ணாலே அருள்புரிந்தார்.
✓
அப்பொழுது நம்பி ராசன் — அங்கே
ஆய்கனி கிழங்குதினை தேனும்படைத்து
''சுப்ரமண்யப் பரம் பொருளே'' — என்று
தோத்திரங்கள் நாத்தழும்பக் கொள்ளப் படித்தான்.
தெம்மாங்கு நடை✓
கந்தா முருகைய னே — எங்கள்
கதிர்காம வேலைய னே
சந்தோஷ காரண னே — கலை
சங்கீத பூஷண னே. (கந்)
✓
பார்க்கப் பரவச மே — உன்
பன்(னி)ரண்டு கையழ கு
தீர்க்க தரிசன மே — உன்
சீரான சேவடி கள். (கந்)
✓
தெய்வயானை வள்ளியு டன் — நீ
செல்வமயில் மீதமர்ந் து
வெய்யவினை தீர்த்திடு வாய் — வடி
வேலாயு தக்கும ரா. (கந்)
காவடிச் சிந்து✓
வேல்முருகா வடி வேல்முருகா வடி
வேல் முருகா முருகா — திரு
மால்மரு காசிவ ஷண்முக வாமயில்
வாகன னே வருவாய் — மயில்
✓
வேலப்ப னேமலை வேலப்பனே — எங்கள்
வீரசெங் கோ லப்பனே — தண்டைக்
காலப்ப னேமறை நூலப்ப னேசெல்வக்
கந்தப்ப னேயருள் வாய் — எங்கள்
நொண்டிச் சிந்து✓
இந்தவிதம் கை தொழுது — நம்பி,
எம்மவரைக் காத்தருளு மென்றிரங்கினான்
அந்தப்பொ ழுதே முருகன் — நம்பிக்கு
ஆட்சிமுடி சூட்டியே யருள்புரிந்து
✓
''நன்றாக வாழ்ந் திடுவாய் — பின்பு
நம்மடியை நாடிவந்து சூழ்ந்திடுவாய்''
என்றுதிரு வாய் மலர்ந்தார் — எங்கள்
ஏறுமயில் ஏறிவரும் ஆறுமுகனார்.
✓
வள்ளியுடன் திருத் தணிகை — மலையில்
வந்துகொலு வீற்றிருந்து சிந்தைமகிழ்ந்தார்
கள்ளமொன் றில்லாத வள்ளி — தணிகைக்
காட்சிதனைக் கண்டுமனை வியப்படைந்தாள்.
✓
''எங்கணும் காண் பரிய — இயற்கை
இம்மலையின் கண்ணமையக் காரணமென்ன?
இங்கிதனைச் சொல்லுக'' என — வள்ளி
இன்பமயில் வாகனனைக் கேட்கையிலே,