தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
காப்புப்பருவம்1 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
காப்புப்பருவம்
11. கண்ணபிரான் துதி✓
சீர்பூத்த வுந்திச் செழும்போதில் நான்முகச்
சிறைவண் டிருந்த வேதத்
தெள்விளி யெடுத்துலகு பதினாலு நல்கத்
திருந்தளிகள் பூத்து நிற்குங்
கார்பூத்த கொண்டற் கனிந்ததிரு மேனியெங்
கண்ணனைப் பண்ணு லாவுங்
கனியிதழ்க் கொன்றையந் தீங்குழற் பவளவாய்க்
கடவுளைக் கைகுவிப்பாங்
கூர்பூத்த செங்கட் கருங்கயற் செந்துவர்க்
கொவ்வைவாய்க் கவுரி யிமவான்
குலக்கொடி மடப்பிடிதன் வயிறுளைந் தீன்றசெங்
குமரனைக் காந்தள் சூட்டுந்
தார்பூத்த பன்னிரு தடம்பொற் குவட்டிலிரு
தனதடக் கொடிகள் படரத்
தண்ணளி சுரக்குந் தரங்கைவடி வேலனைச்
சந்ததங் காக்க வென்றே.
22. விநாயகக் கடவுள் துதி✓
காமேவு கற்பகப் பொன்னா டளித்திடுங்
கடவுளர்க் கரசு வாய்த்த
கனதனப் பொற்குவடி ரண்டைச் சுமந்திடுங்
களியானை மண வாளனை
மாமேவு பச்சைப் பசுந்துழாய்க் கொண்டலிரு
வரந்தருந் திருமாயவன்
மருகனைத் தென்றரங் கன்புரியில் வீரவேல்
வள்ளலைக் காத்தளிக்கத்
தேமேவு நற்கனி விரும்பிச் சுரும்புமுரல்
செம்பொனங் கொன்றைசூட்டுஞ்
செஞ்சுடர்க் குன்றைவலம் வந்திடுங் கன்றரிய
திருநான் மறைக்குமெட்டா
நாமேவு குடிலைப் பரஞ்சுடர்ச் சூழுமொளி
நான்முகத் தேவமுத்து
நால்வாயின் விறகற் பகயானை செய்யவடி
நளினந் துதித்திடுகவே.
33. சிவபெருமான் துதி✓
முரிதிரைவிரவு குடவளைவயிறு முதிர்கரு நித்திலங்
கார்மலர்க் காத்தொறு
முழுமதிநிலவின் முகிழெனவுலவ மொழிதரு சொற்றரங்
காபுரிச் சீர்த்திகொண்
முழுமுதல் சுருதி யரியயன் மார்க(ள்) முறைதொழு நித்தரங்
காதரித் தேத்துரை
முழுதுல கவர்கள எடிதொழ வருளு முதல்கிரி பெற்றிடும்
பார்ப்பதிக் கேற்றவர்
திரிபுர மெரிய விளநகை கொளுவித ..... னெழின..... மெய்ப்புறந்
தூள்படப் பார்த்தவர்
தெரிதரு மதுர கவிவலா பரசு திகழொளி சுத்தரிந்
தார் சடைச்சூட்டினர்
திரைநதி யிதழி யறுகலர் செருகு திருமுடிநற்களங்
காரெனக் காட்டினர்
செழுமறை துடரு மலரடி யுகள சிவமுதல் நிட்களங்
கேசரைப் போற்றுது
அரவுட லுரக முடிநெளி நெளிய வருதிசை மத்தகங்
கூர்மதப் போர்க்கரி
மறுபுற முறுகி நிமிர்தலை கவிழ வளர்புனல் மொய்த்தலம்
பார்திரைக் கூக்குரல்
மறிதிரை யுவரி சுறுசுறு சுறென மறுவள மொய்த்திடுந்
தாரகைக் கூட்டமொண்
மணிமழை பொழிதல் நிகரென வுதிர வடகுவ டுட்கநந்
தாரணிக் கோக்குல
வருவரை பொருமி மிகநெரி நெரிய வசுரர் சமர்க்களந்
தீயெழப் பூக்குழல்
அவுணர்தம் மகளிர் வயிறெரி தவழ வடலொ டெதிர்ந்திடுஞ்
சூரன்மற் றோட்டுணை
யவை கிலுகிலென வரமொடு விறலு மறவுடல் வெற்பிரண்
டாய்விழப் பார்த்தொளி
அடலயில் முடுகு சரவண பவனை யலரவும் வெற்பலங்
காரனைக் காக்கவே.
44. பிரமதேவன் துதி✓
செம்பொற் பொலன்குவட் டீரா றுடைப்பெருஞ்
செம்மணிக் குணபூதரச்
சென்னியிற் றுன்னுசெங் கதிரோத யத்தபனர்
சேர்ந்தனற் கிரீடநிறையும்
அம்பொற் புயக்குவடு மணிமார்பு மாகவந்
தடியேனு ளத்தடத்தும்
அலையெறி தரங்கைப் புரத்தும் புரக்குமெம்
ஐயனைக் காத்தளிக்கக்
கம்.....த்து நெக்கிடுங் கனியிற் கனிந்துளங்
கடவுண்முனி வரரேத்திடக்
கற்பகக் காவரைசு மெண்டிசைப் பாலருங்
கருதுபுத் தேளிரெவருந்
தம்பொற் பிரகாசமணி முடியால் வணங்கவெண்
டாமரைத் தையல்தழுவத்
தமனியத் தண்டமுக டுச்சிமே லரசுபுரி
சதுர்முகத் தண்ணலவனே.
55. துர்க்கை துதி✓
கடுசின முடற்றி யெற்றும்வா ளவுணர்கள்
மதுதெறிக்க விட்டகோ ளரிசொல
ககனமுக டெக்கி நிற்கும் யானைபல
கதறவிரு மத்தகத்து லாவிவர
முடுகி யெதிர் கொக்கரித்த மாமயுடன்
முதுகுடல் பிளக்கவெட்டி நாளுமவன்
முடிமிசை மிதித்த துர்க்கை மாதுமலர்
முளரியடி யைப்பழிச்சு வரமேமது
கொடிய வினைவெற் பிடித்து வாழுரக்
குலபதி முடிப்படத்து லாவுமணி
குலைய மெய் கிழித்தெடுத்த வீரமயில்
குலவிபிர புச்சமத்தர் வேலிறைவர்
தொடு கடல்கொழித்த முத்துவால் வளைகள்
சுடர்மதியுடுக்க ணத்துலா வணிகர்துதி
தனதநற் புரிக்குள் வாழ் முருகா
சுமுகாகு கரைப்புரக்க நாடொறுமே.
66. பிரமன் துதி✓
பூந்துணர்க் கற்பகக் காவுந் தளிர்க்கப்
புலோமிசை மணிக் கழுத்திற்
பொன்னூற ரிக்கப் பெருந்தேவர் காற்றளைப்
பூட்டுந் தெறிக்க வழலிற்
காந்துவெஞ் சீற்றக் கொடுஞ்சுரி யனுள்ளங்
கலங்கக் கலங்க உந்தி
கதிர்வே லொடுந்தன் கடைக்கண் சிவக்குமெங்
கந்தனைப் போந்த ளிக்கப்
பாந்தள்வெஞ் சுடிகையிற் சுடர்மணி குயிற்றிவின்
படருங் கொடிஞ்சில் மானம்
பரிவிற் பெறப்பொன் விழியிற் பெறச்சீர்கள்
பாவளகை புரவு பூண்டே
யேந்துமற் றிருநிதி புரக்கச் சுரக்குமரு
ளெந்தையைச் சந்த மறைதே
ரிறைவனைத் தென்றரங் காபுரியில் வந்துநின்
றேத்துந் தனிக் கடவுளே.
77. சத்தமாதர்கள் துதி✓
முப்புர மொரு நொடியி லட்டடலை யாகவொளிர்
முத்துநிறைதரு முறுவ லாடிநின்றவள்
முற்றுசது மதிவதனி சக்கிரிக வுமாரிதரை
முற்றுமகிழ் வதனமலர் கோலமென்றவள்
துப்புரமு மிதழிகிரி யிற்சிறகா ரியெதிர்
துரகனுயிர் கவரமுனி வாகிநின்றவள்
சொற்கிறைவி வனசமயிலிப் புவனயா யிவர்கள்
துத்திமல ரடியுகளை யாம்வணங்குதும்
வெப்புரக பதிமகுட முற்கிழிய வோர்களினர்
விட்டுவள ரவுணர்குல மாவெனுந்தரு
வெட்டியழு தசணர்படு துக்கமொழி வாகவருள்
வெற்றிமயில் முருகர்வடி வேலர்புங்கவர்
இப்புவியில் வளமருவு சொற்கநிக ரானதல
மெய்ப்பொருளு மருவுதிரு வாழ்தரங்கையி
லடடமுறு மிறைவரருண் வைத்தமுரு கேசர்தமி
ழெத்திசையு மேறுமவர் சீர் விளங்கவே.
8✓
ஊழியிற் பெருவெள்ள மொப்பக் கடாகலுழி
யூற்றவுயி ராற்றாதுகண்
டுலவும் பெருஞ்செவிக் காற்றிற் சுவற்றியவ்
வுயிர்க்கருள் சுரந்தளிக்குஞ்
சூழிக் கராசலக் கற்பகச் கோதுரச்
சுந்தரனை யறம்வளர்க்குஞ்
சுமங்கலி யளித்தரு டரங்கைவரும் வீரவேற்
றுய்யனைக் காத்தளிக்க
வேழக் குலாதிபத் தரைசுவர மேற்கொண்டு
விண்ணா டளிக்கும்வேந்தின்
விரைமலர்க் கொந்தார்மந் தார்மாலை முகை
விண்டுதண் டேன்றுளிக்கப்
பாழிப் புயாசலக் கந்தினிற் பூட்டுபொற்
படர்முலைக் கடாக்களிற்றுப்
பவளவாய்ச் செங்கட் கருங்குழற் காட்டளிகள்
பாட்டுளர் பிராட்டிதானே.
9✓
மகவான மதமாமலை யயிரா பதராசதன்
மதிவாணுதறேமொழி யயிராணிமணாளனை
முகின்மா மலைபூரணை யுயிர்நா தனைவேதனை
முடிகீறியமுதலைா ரடிபாடுகும்
அகநன்மறை தேர்தருதன தாபுரி வாழ்தரு
கருணாகரன்மாதுமை யருநாயகன்வேல்பெறு
குகநாயகன் வாழ்சிவ குருநாயகன் வானவர்
குலநாயகன்மென்னிகுல வாரருள்கூரவே.
10✓
வாராட்டு கொங்கைக் குவட்டிலங் கிரிராச
வல்லிதன் மடியில்வைத்து
மணிநுதற் சுட்டியுங் கட்டுபொன் னரைஞாணு
மவிரொளித் தாளவடமுஞ்
சீராட்டு முச்சியிற் கொண்டையுங் கெண்டையுஞ்
சேர்த்துப் புனைந்திடுக்கிச்
செம்பவழ வாய்நெரித் துச்சிமோந் திடுமயிற்
செல்வனைப் போற்றி நிற்பார்
தாராட்டு பொன்முடித் தபரைபன் னிருவருந்
ததைமலர்த் தொங்கலாழித்
தலைவர்களு ருத்திரக் கடவுள்பதி னொருவருஞ்
சாற்றுமெண் வசுக்கடவுளும்
பாராட்டு சீர்த்திகொண் மருத்துவர்களிருவரும்
பருமணி முடித்தேவரும்
பலகட லொலிக்குந் தரங்கா புரிக்குட்
பராவிநின் றெஞ்ஞான்றுமே.