முருகன் App
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
வாரானைப்பருவம்6 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்

வாரானைப்பருவம்

51✓
அருப்பிளங் கொங்கைத் தடங்குவட் டிந்திராணி
அகமலரந் துவகை கூர
அவர்கண் டலக்குரிசி லோரா யிரங்கண்ணு
மன்புற் றலர்ந்து நோக்கி
விருப்புற்று நின்னடிக் கமலந் துதிப்ப வொளிர்
விண்ணாட் டரம்பை மகளிர்
வெள்ளத் தளர்ந்த கட்காவி மலர்மாலையு
மென்முலைத் தெய்வ யானை
திருப்பரம மென்கரப் பொன்னரியின் மாலையுஞ்
செம்பொற் புயத்தின் வீழச்
செழுமுனிவர் கைத்தல முகிழ்ப்ப மதிபாற்கடற்
றிரைமுகட் டுற்ற தன்ன
மருப்பிரண் டாயிரத் தயிரா வணப்பிடரின்
வந்தமண வாளன் வருக!
வளமலி தரங்கையகி லாண்டகுல. வல்லிபெறு
மயில் வாகனா வருகவே!
52✓
கிளைக்குங் கொடுஞ்சூரி னுயிருண்டு தேக்கிடுங்
கிளரயிற் செவ்வேலினைக்
கெண்டை யங்கண்ணி னைக்கொப் பென்றுமாமணிக்
கெழுஉமெழிற் கிரீட நிரையைத்
திளைக்கும் பசுங் களப மென்முலைக் கொப்பென்று
சேயிதழ்க் காந்தண் மலரை
செம்பவள மெல்விரற் கொப்பென்று மாமயிற்
செவ்வியஞ் சாய லென்று
மிளைக்கும் படிக் கெழுதி வாயாது கண்டுகண்
டின மடலை விட்டெறிந் திட்
டிலை யிலா வேடிச்சி தேனுகுத் தன்ன சொற்
கெழுமூரி யேறுபோன்று
வளைக்குந் தினைப்புனஞ் சூழ்ந்துகா லோய்ந்திடும்
வள்ளலே வருக! வருக!
வளமலி தரங்கையகி லாண்டகுல வல்லிபெறு
மயில் வாகனா வருகவே.
53வேறு✓
உரகபதி கணபணவி லொளியுமிழு மணிகொழிசெய்
துலவுபய வுததியிடை யொருகோடி யாகமாக
வுதயம் நிகரதர வலகில்பல புவனமுழு
தொருநொடியில் வலன்வருவெள் விடையேறி சேய்வருக
வரகவிசொ லருணகிரி யதிகரச மொழுகுகனி
வடியமிழ்து மதுவுநிகர் தமிழ்மாலை சூடிவளர்
மதுரகவி புயசயில மணிவருக வடியருள
மலரிரெழு சுடரிரவி வடிவே சலாம் வருகவே
நிரதிசய வொளிவருக வெளியின்மிடி யிருடுலைய
நிலவுபொழி தருவருக பொருதாரு காசுரன்மெய்
நிணமுமவளர் குடருமிகு முதிருமுட னுரமுமவ
னெடுவரமு முயிருமுண நிமிர்கால னேவருக
குரவுகம ழளகபரி மளபவள விதழமுது
குணகுகிளி மழலைபொழி வளர்தேவ யானைபுணர்
குசலவிடை பெறுமசல தனதபுரி தழையவரு
குமரகுரு பரமுருகசுகுலி சாயுதா வருகவே.
54✓
கள்ளக் கலகவிழிக் கமலை கணவன்
புறவிற் றனின் முல்லைக்
கண்ணி யுனது முடி சூட்டக்
கருதி வந்தான் வருகவே
யள்ளற் கமலப் பொகுட் டுறையு
மவனு மகதி வீணைமுரல்
அவனும் உனது புகழ் பழிச்சி
யருகில் நின்றார் வருகவே
கொள்ளைச் சுரும்பர் படிதருவிற்
குரிசில் மானோடும் பணிந்துன்
கொலுச் சேவிக்க வந்து நின்றார்
வள்ளத் தருவி பருக கனி
வாயான் வருக வருகவே
மல்லற் றரங்கை யிறைவர் பெறு
வாழ்வே வருக வருகவே!
55✓
கொடிக்கு நிகரு மொளிர் மின்னார்க்
கொடிகள் குழுமிற் றெனத்திருவுங்
குலவுஞ் சசியுங் கலைமகளுங்
கூடி மருங்குற் பாவியையே
யொடிக்குங் களப முலைக் களிற்றை
யுடனே யிருத்தி மங்களவாழ்த்
துருகி வாழ்த்துங் கலியாணத்
துவக்குங் குமரா வருகவே
படிக்குங் கிளியுங் கான்புகுதப்
பவளக் கனிவாய் கனிந்தூறும்
பசுந்தே னமிழ்துங் கலந்த தெனப்
பாடுங் குழலார் நடங்குயிற்றி
நடிக்குந் தமிழ்கா விரிநாடா
மணியே வருக வருகவே
மல்லற்றரங்கை யிறைவர் பெறு
வாழ்வே வருக வருகவே.
56✓
திருவே வருக வருள்கொழிக்குந் தேவே
வருக கவுரி யிளஞ்
சேயே வருக நிருதருக்குத் தீயே
வருக பிறப் பறுக்குங்
கருவே வருக வருள்பழுக்குங் கனியே
வருக சூரர் துலைத்த
கடம்பா வருக எமதிடுக்கண் களைவாய்
வருக மதிமுடித்தார்
குருவே வருக மலைக்குறத்தி கோவே
வருக நிட் களங்கர்
குமரா வருகமயி லுகைக்குங் குகனே
வருக மலரிருக்கு
மருவே வருக மூவிரண்டு வதனா
வருக வருகவே
மல்லற் றரங்கை யிறைவர் பெறு
வாழ்வே வருக வருகவே.
57வேறு✓
நிருதர்குல கலக வமரர்குல திலக
நிபுண சுகுண குகன் வருகவே
நெடியவுட லூரகன் மகுடமணி யுதறி
நிமிறு மயிலழகன் வருகவே
கருது முனதடியன் வெருவு கொடியபிணி
கருக வருள்பெறுக வருகவே
கவுரியிரு விழியு மனமு மலரவரு
கருணை தருகுரிசில் வருகவே
மருது மொடியவுருள் சகடுமிடியமத
களிறு மடிய வுதய வனசமால்
மருகபர சமய கருகமிருள் பருகி
வளருமதி வதன வருகவே
பொருது கமுகநிரை விரவு தனத
புரிபுரவு தருமுருக வருகவே
புளக மிளகுமுலை முகிள குறவனிதை
புணரு மினியபுயன் வருகவே.
58✓
நிலவு தவழு முழுமணி கொள் கடிகைநுதல்
நிழவிழி மலர் வருகவே
நிமிரு முடியசைய வழகு குழைய செய
நிமலனுதவு வருகவே
………
……… வருகவே
இமைய மயில் வயிறு நனைய………
……… வருகவே
சதுர பொருநிருதாவ………
………
………
புரவுதரு மிறைவ வருகவே
புளகு………
………