தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
செங்கீரைப்பருவம்2 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
செங்கீரைப்பருவம்
11✓
பங்கே ருகத்தனெரி வெட்கருப் போனொளிர்
பைம்பொனின டப்பைதாங்கப்
பருதிகணி தஞ்சொலத் திங்கள்வெண் குடைதரப்
படர்சனலி தீபமேந்தக்
கொங்கார் நறுந்தொடைப் பவன்னவரு ணன்சிவிற்
கொள்ளயெம னுடைவாள்பெறக்
குலநிருதி சாமரை யிரட்டப் புரந்தரன்
கொண்டுதக நீர்வார்த்திட
அங்காதல் கொண்டுவளர் முலையானைக் கைப்பற்றி
யருண்மணிக் கோலமுடனே
ஐயன் றரங்கையின் மாசிலா மணிபுணரும்
அகிலாண்ட வல்லியருகட்
செங்காவி மலர்வரு சந்திரோத யக்குமர
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மணிமகுட மூவர்க்கு மொருதலைவ
செங்கீரை யாடியருளே.
12✓
பச்சைப் பசுங்கதிர் கற்றைக் கலாபம்
பரப்புஞ் சிறப்புமயிலும்
படரொளித் தண்டையுங் கிண்கிணிக் காலுமொளி
பாயும் நிசாரினழகுங்
கச்சிற் பொலிந்திலகு மின்னொளிச் சுரிகையுங்
கட்டுசெம் பட்டுனுடையுங்
கவினினந் தொந்தியுங் கொந்தியுங் கையுமொளி
காட்டுபொன் பூட்டுமார்பு
மிச்சைப் படுங்கனக குண்டலக் காதுமெழி
லேந்துபொன் முடிகளாறு
மிலங்கவந் துன்னடித் தொண்டருக் குற்றிடத்
தெதிர்வந்து நிற்குமுருக
செச்சைத் தடம்புயர் மெச்சுந் தரங்கையாய்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மணிமகுட மூவர்க்கு மொருதலைவ
செங்கீரை யாடியருளே.
13✓
தோட்டிலங் கற்பகப் பொன்னரித் தொங்கற்
சுராதிபன் வதனகமலத்
.............................................
மோட்டிலங் கொங்கைத் தயித்தியக் கன்னியர்கள்
முகிழ்நகைக் குமுதவாய்வாட்டி
முனஞிமிறு சுருதியுஞ் செவ்வழிப் பாட்டிசை
முழங்கத் தழங்குகுரலிற்
கோட்டிலங் கேழலறி யாதவடி வாரமுங்
கொடிமுடியோ ரெட்டுமுடைய
குலகிரிகன் னெற்றியிற் செங்கதிர்க் கற்றையொளிர்
கோடான கோடியுதையச்
சேட்டிலம் பருதித்தரங் காபுரிக் குமர
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மணிமகுட மூவர்க்கு மொருதலைவ
செங்கீரை யாடியருளே.
14✓
கண்டகர் குலக்குரிசில் வெஞ்சூர னென்கட்
கரந்தன னெனத்திருவுளங்
கண்டுதய பானுவிற் செஞ்சுடர் கற்றைபொழி
கதிர்வேல் விடுத்துமுன்னீர்
மண்டுமென் றிறல்கெடுத் தனைமுன்ன மின்னமது
மதியாத ளித்தியெனவோ
வளரொளிக் கனகமு நித்திலக் குவையலு
மணிநிறப் பவளமலையு
முண்டிருட் படலங் கிழித்தெறியு நவரெத்தின
வொள்ளொளிக் கிரிராசியு
மொங்கலன் வங்கந் தனைகொண்ட ளந்துதிறை
யொப்பக் கொழித்துநாளுந்
தெண்டிரை யிரைஞ்சுந் தரங்கா புரிக்குமர
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மணிமகுட மூவர்க்கு மொருதலைவ
செங்கீரை யாடியருளே.
15✓
கங்கைப் பெருங்குலவு கொன்றைச் சடைக்கடவுள்
கண்மணிக் குமரேசனே
கற்பகக் காவரை சளிக்கப் புரந்தரன்
கடவுள்வெஞ் சிறைமீட்டிடக்
கொங்கைத் தடங்குவட் டிந்திரா ணிமங்கலங்
குலவுநாண் பூட்டவகிலங்
கொடுங்கலித பத்திரம் தெய்வந் தழைத்திட
கொக்கரித் தெதிர்சூர்முதல்
அங்கத் துளைத்துக் கிரௌவுஞ்சம் பிளந்தவுண
ரணிதளங் கெட்டுமுரிய
வண்டவண் டங்களுந் திண்டாட வேல்பணித்
தருளொடு தரங்கைவருவோர்
சிங்கத் தனிக்குருளை சங்கத் தமிழ்ப்புலவ
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மணிமகுட மூவர்க்கு மொருதலைவ
செங்கீரை யாடியருளே.
16வேறு✓
துங்க மணிக்கன கத்தி லிழைத்திடு
தொட்டி லுதைத்தாடி
துய்யபொன் மேனி முறுக்கி யெழுந்து
துடிப்ப விதழ்ப்பவள
மெங்கு முழக்கி யழக்கிரி மகடா
னிரங்கி யிடுக்கிவள
ரிளமுலை கொட………………
….கடலேந்திய……… பவளா
செங்கையி னொருமுலை வருடக் கட்கடை
தேவிமுகம்பார்……
…..வாயி லொதுக்கிச் சிறுநகை
………நிலவூர
அங்கலுழ் கடைவாய் யொழுக மடுத்தவ
னாடுக செங்கீரை
யார்கலி பொங்குதரங் கைக் குமரா
வாடுக செங்கீரை.
17✓
சுரங்களு மாடச் சுருதிக ளாடத்
தொழுமுனி கணமாடச்
சுடர்மதி நிலவு ………
……..பொலி துய்யவேண்டிக்
கரைபொரு கங்கைத் திரைநுரை பொங்கிக்
காலுவ தெனவீசுங்
க……… தும்பைத் தொங் கலாடக்
கங்கண வரவாடக்
கிரிதரு கொங்கைப் பெண்களி யாடக்
கிளர்தலை வடமாடக்
………யாடச் சங்கரியா ………….
கொழுபுலி முனியாட
அரைமதி முழுமதி யாகப் பணியரை
சாடச் சடையாட
வழகுடனா ………………ளியாடி
வாடுக செங்கீரை
யார்கலி பொங்கு தரங்கைக் குமரா
வாடுக செங்கீரை.
18✓
செய்ய பொலன் கு…….. வனைத்த
செழுஞ்சுடர்…….. வினிலுஞ்
செம்மணிகொட்டி யிழைத்த வுலம்பொரு
திண்டோ ளெட்டினிலுந்
………டியறம் வளர்மாதுரைத்
………தமனிய மடிமேலுஞ்
சந்தன பாளித குங்கும மெழுதுங்
கனதட முகின்மேலுங்……..
மெய்யிலு மார்வக் கங்கையு……..
………………
நற்கனி யிதழ்வாய் நீர்மார்பு நனைப்பக்
கதிர்மணி முடியசைய
ஐய தவழ்ந்து வளர்ந்து விளங்க
வாடுக செங்கீரை
ஆர்கலி பொங்கு தரங்கைக் குமரா
வாடுக செங்கீரை.
19✓
…………திட வமரர்கள் வாழ்ந்திட
வந்தா யிந்தூரு
மருணில வார்ந்திடு சடிலர் புரந்தக
னன்பு றுந்தேனே
வசையொடு மோங்கி நிருதர்கு லேந்திர
லெங்கே சன்றோள்கண்
மடியவில் வாங்கினன் மருகசொல் காங்கய
வண்டார் விண்டோடு
மிசைமெரு வேந்த ரெனமக ளீன்றரு
ளெந்தாய் சந்தாரு
மிளமுலை மான்கனி நலன்மது வார்ந்திடும்
வண்டே யென்றோது
திசைசெவி டார்ந்திட வருமயி லூர்ந்தவ
செங்கோ செங்கீரை
திருமகள் வாழ்தரு தரங்கையி னாண்டகை
செங்கோ செங்கீரை.
20✓
நிகழ்துற வார்ந்தொழு மடியவர் சூழ்ந்தருள்
கந்தா மந்தார
நிழலரை சீன்றருள் மதகளி றுங்கொடி
பங்கா கங்காளர்
மகிழ்வரு தீங்கனி யமரர்க ளாய்ந்திடு
சந்தா பந்தீர
வருகுக மூண்டெழு மவுணர்கு லாந்தக
கண்டா னுண்டாரு
புகழ்மது வார்ந்திடு சுவையமு தாங்கனி
யெந்தாய் நந்தாத
புவிபுனல் வான்றழல் வளியுயிர் வான்சுட
ரென்றோ துந்தேவே
திகழொளி கான்றருள் வளர்வத னாம்புய
செங்கோ செங்கீரை
திருமகள் வாழ்தரு தரங்கையி னாண்டகை
செங்கோ செங்கீரை.