முருகன் App
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
சிறுதேர்ப்பருவம்10 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்

சிறுதேர்ப்பருவம்

89வேறு✓
முத்தொழிற் கடவுட்கும் மேல்வருங் கடவுளூர்
முழுமணித் தேரும்நாண
மொய்யொளிகள் கக்கிடுங் கலினவாம் புரவியை
முடுக்குங் கருத்துணர்ந்து
மத்திகை நினைப்பவே திந்திரஞா லத்தேரும்
வல்விசைக் கடுப்புமுட்க
மறிகடற் கண்டது விசும்பினிற் கண்டதிம்
மானிலத் துற்றதென்று
மித்திசையி லுற்றதன் றத்திசையி லுற்றதென்
றெவருங் கலங்கமனமு
மிளைக்கப் பெருஞ்சாரி யண்டகோடிகள் சுற்றி
யதிராடு துருமுட்சச்
சித்திரப் பெருந்தேர் நடத்துந் தரங்கைவேள்!
சிறுதே ருருட்டியருளே!
திருமுருக! வமரேசர் பரவவருள் குமரேச!
சிறுதே ருருட்டியருளே!
90✓
அண்டபகி ரண்டமு மூதண்ட கூடமு
மகிலமுந் தேரமுட்டி
யாயமரர் முப்பத்து மூவர்க்க மும்பிரதி மை………
யலரிமதி பாண்டிலாகிப்
பண்டருஞ் சுருதியொரு நான்கும் வெம்புரவியாய்ப்
படரொளிக் கிரிகளெட்டும்
பருமணிக் கால்களாய்த் திக்கெட்டும் நல்லொளி
பரப்புங் கொடுஞ்சிலாகி
எண்டருஞ் சக்கிரகிரி யச்சென வுடுக்கணமு
மெரிமணித் தொங்கலாக
வேத்தும் பெருந்தேர் நடாத்தும் பரஞ்சுட
ரின்னருட்குமர! முருகா!
தெண்டிரைத் தென்றரங்கா புரிக்கதிபனே!
சிறுதே ருருட்டியருளே!
திருமுருக! வமரேசர் பரவவருள் குமரேச!
சிறுதே ருருட்டியருளே!
91✓
துப்பரும் பொற்பிலகி வெயில்விட் டெறிக்குமணி
யுமிழ்கதிர்க் கற்றைமாடத்
தொள்ளொளிச் சாளரத் தண்ணித்திலக் கோவை
யொன்றொடொன் றெற்றுமோசை
இப்பெருங் கற்பகப் பொன்னகரு மின்னகர்க்
கிணையுறாதென்ன அண்ணாந்
தெல்லொளிப் பகுவாய் திறந்து கலகலவென்
றிரைத்துச் சிரித்தல் மானுந்
தப்பருஞ் செய்குன்று மணிமா ளிகைக்குலந்
தமனியச் சிகரிபுரிசை
தரணிதல முங்கடந் தண்டமுக டுச்சியுந்
தடவிப் பொலிந்து சுடருஞ்
செப்பருங் கண்ணொளி பரப்புந் தரங்கையாய்
சிறுதே ருருட்டியருளே!
திருமுருக! அமரேசர் பரவவருள் குமரேச!
சிறுதே ருருட்டியருளே!