முருகன் App
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
சிற்றில்பருவம்9 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்

சிற்றில்பருவம்

79✓
தண்ணென் றெழுந்த இழைமுத்துந்
தழைத்த கமுகமடன் முத்துந்
தருக்குங் காமன் சமராடச்
சரிந்த முத்து மதிமுத்தும்
விண்ணங் கொழித்த மழைமுத்தும்
விரிநீர்த் தவள வளைமுத்தும்
வெறுத்துன் னடிமே லடியரிடும்
வெண்டா மரையின் முத்தெடுத்துப்
பண்ணுஞ் சுவர்செய் தமைத்துரக
பணத்தின் மணியால் விளக்கேற்றிப்
பரிவாற் புகழ்ந்தே மகிழ்ந்தமரர்
பதிகாவலனே பெண்ணிருவர்
கண்ணே கண்ணுட் கருமணியே!
கனியே! சிற்றில் அழியேலே!
களிவண்டாடும் பொழிற் றரங்கை
கந்தா சிற்றி லழியேலே!
80✓
சுருதி பரவு முபநிடதம்
தொடர்ந்து தொடர்ந்துன் னடிதேடத்
தோகைக் குறத்தி தனைத்தேடிச்
சுரத்திற் றிரிந்தா யென்றனமோ
பெரிது மமரர் புருகுதன்
பிரமன் முதலோர் உனைப்பணியப்
பேதை யடிக்கீழ் பணிந்தெழுந்த
பெம்மா னிவன்றா னென்றேமோ
அரிது முனிவர் புரிவேள்வி
யவிசு மகிழ்ந்து தானிருக்க
அரிவை பவள வாயூறற்
காசைப் பட்டா யென்றனமோ
கருது மொளியே! ஒளிமுத்திக்
கனியே சிற்றி லழியேலே
களிவண் டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா! சிற்றி லழியேலே!
81✓
அருணோ தயமே குறுமுனிவ
னன்பில் விளைந்த செந்தேனே!
ஆரா வமுதே! தொண்டர்பெறு
மருங்கற் பகமே யுபனிடதப்
பொருனாடா னாரிறைஞ்சு………
பொதான……… தேசிகவுன்
பூஞ்சே வடிகள் செப்பூறப்
புழுதி யாடிற் கிரிராச
தருணோ தயப்பூங் கொடியிருக
ணடைத்தே யுளைத்து மடிவருடுந்
தையலார்கை சரசரப்பாஞ்
சற்றும் விளையாட் டியல்பன்றால்
கருணா கரனே முருகோனே!
கனியே! சிற்றி லழியேலே
களிவண் டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா! சிற்றில ழியேலே!
82✓
சதுர்மா முகத்துப் பெரியோனுந்
தண்டார் துளபக் கரியோனுந்
தருக்கார்ப் படைத்துக் காத்தளிக்கும்
தரங்கக் கடற்பா ருலகேழு
மதுவா ரிதழித் தொங்கலணி
மழுவாட் படையோ னின்றாதை
மதிக்குங் கணத்துட் பொடிபடுத்தும்
வலியி நிகர்க்கும் வகையிதுவோ
புதுவார் கமலப் பதஞ்சேப்பப்
புனைவெஞ் சிற்றி லழித்திடுதல்
புகழன் றுனக்கன் றரமகளிர்
பொன்னாட் டமர ரொடும்புணர்ந்து
கதிர்செய் மணிமா ளிகையிருப்பக்
கண்டாய் சிற்றி லழியேலே
களிவண் டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா சிற்றி லழியேலே!
✓
துளிக்கும் நறவார் மலர்த்துணராத்
தொண்ட ருன்றாட் புனையவருந்
தோகைக் குறத்தி குற்றேவற்
றொழும்பு புரித றன்கேட்டே
யளிக்குங் கடவுண் மால்யானை
யடருங் காமத் துனிதீர்க்கவ்
@todo merge this with following stanza for #83
83✓
வனமென் குழற்பூ மயிர்வார்த்திட்
டலாகை புனைதற் கேகிலையோ
தளிர்க்கும் பசுங்கற் பகமலரிற்
றண்டார்க் குரிசில் பிரமன்முதற்
றலைவ ருனது கொலுக்காணச்
சார்ந்தார்க் கருடற்கே கிலையோ
களிக்குங் கருணை மாசில்லார்
கண்ணே! சிற்றி லழியேலே!
களிவண்டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா! சிற்றி லழியேலே!
84✓
வள்வார் விசிக்குந் துடிவேடர்
மதமா முகத்துச் சலக்கெனவீழ்
மணிவெண் டரள மருப்பொசித்து
வசிக்கு மிதணிற் கோனிரைத்துப்
புள்வார் மயிற்றோ கையின்வேய்ந்து
புதுமென் கவரி கற்றையிட்டுப்
புனையுங் குடிலிற் புனங்காக்கும்
பொன்மான் பிணையிற் றனிபிறழும்
வெள்வே னெடுங்கட் குறத்திகிளி
விளிக்குங் குரற்கேட் டியாயிசைக்கு
விரும்பு மிதுன கின்னரம்போல்
விழைசெஞ் செவிகள் கொடுத்துநிற்குங்
கள்வார் செச்சைத் தொடைபுனையுங்
கடம்பா! சிற்றி லழியேலே!
களிவண்டாடும் பொழிற் றரங்கைக்
கந்தா! சிற்றி லழியேலே!
85வேறு✓
வழியிற் குழியிற் சுழிநீரின்
மதகிற் புதவிற் பொன்கொழிக்கு
மடையிற் புடையிற் செஞ்சாலி
வயலிற் புயலிற் றழைத்திடுங்கா
வுழியிற் புழையில் மரப்பொதும்பி
லோங்கும் வரம்பிற் கெழுமுரம்பி
லுயருந் தடத்திற் றிடலகத்தி
லுரைமுத் தமிழ்பா வலருரைக்கு
மொழியிற் றெளியும் புனற்றடத்தில்
முழங்குங் குடவெள் வளையினங்கள்
முருவெண் டரளங் கொழித்தூரு
முளரித் தடஞ்சூழ் சோணாட்டா
கழியிற் றிரிமீன் விழிவள்ளி
கணவா! சிற்றி லழியேலே!
களிவண் டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா! சிற்றி லழியேலே!
86வேறு✓
கோலுஞ் சிறுவெண் மணற்சிற்றில்
குஞ்சியலையக் கரும்புருவக்
கொடிவேர் வொழுக யிடைதுவளக்
குளிர்மென் றளிர்க்கை செப்புறயாஞ்
சாலு மொருபா லிழைத்திடநீ
தாளாற் சிதைத்த லொருகோடி
தபன ருடலங் கடைந்திழைத்த
தென்னப் பன்ன கேசன்மணி
யாலும் பசும்பொன் மணியாலு
மவுண ரிழைத்த மகேந்திரத்தை
யழிப்பப் பயிற்றும் விச்சையது
உயர்த்தா யிலையோ கோற்றேனும்
பாலுந் துவர்ப்பச் சின்மழலை
பகர்வா ரடக்கு குவடுறழும்
பணைக்கு முலைக்குங் குமச்சேறு
பாயுங் கடனீ ருவர்ப்பகற்றி
காலும் புனற்கா விரிநாடா!
கனியே! சிற்றி லழியேலே
களிவண் டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா! சிற்றி லழியேலே!
87வேறு✓
சுடர்விட் டெரிக்குஞ் செழுஞ்சோதி
துளும்பு மணியைக் கழுவியன்ன
தூமேனி யின்மஞ் சனமாட்டித்
தூமென் றுகிலாற் றுவட்டியொளி
படருங் குடுமி யுலர்ந்துமுகம்
பரிவிற் றுடைத்துப் பால்புகட்டிப்
பருத்தி வெம்புஞ் சுழற்றி யுமை
பரிந்து மறுகில் விடுத்ததுணை
யிடையிற் குயிற்றும் பேராய்த்
தேழை யமக்கு யிடர்விளைத்திட்
டேக வன்று நிருதர்குறும்
பெறிந்து களைதற் கென்றலவோ
கடக மணிப்பொற் கரதலத்துக்
கடம்பா! சிற்றி லழியேலே!
களிவண் டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா! சிற்றி லழியேலே!
88வேறு✓
கோட்டுங் கனக கிரிசிலையைக்
கொள்ளும் பெருமாள் பொதுவினடங்
குனிக்கும் பெருமாள் செவிக்கொருசொற்
கூறும் பெருமா ளவுணர்குலம்
வாட்டும் பெருமாள் விபுதர்நிதம்
வணங்கும் பெருமாள் பொறிமயில்மேல்
வாழும் பெருமாள் பஞ்சவர்க்கு
மன்னர் பெருமாள் தனக்குமமர்
மூட்டும் பெருமாள் மருகனென
மொழியும் பெருமாள் களிற்றுரியால்
மூடும் பெருமா ளதோவென்ன
முகின்மென் முலைத்த மிடுப்பிருந்து
காட்டும் பெருமா ளென்னுமருட்
கடலே! சிற்றி லழியேலே!
களிவண் டாடும் பொழிற்றரங்கைக்
கந்தா! சிற்றி லழியேலே!