தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
முத்தப்பருவம்5 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
முத்தப்பருவம்
#41✓
வெண்ணிலாக் கற்றைக் கடாங்கவிழ்க் குங்கோட்டு
வேதண்ட வேந்தளிக்கும்
வெயில்மணிச் செம்பொனிற் றிருமணப் பந்தர்வரு
மெல்லியற் கொம்பர்துட்டுந்
தண்ணா ரகக்கற்றைக் கருங்குழற் பாரமோ
தனதடக் குன்றினிரையோ
தாங்குதற் கென்றங்கு சிற்றிடைப் பரவிற்பாற்
றண்ணளி சுரந்துநோக்குங்
கண்ணெனும் பன்னிரு குடங்கையாற் கொடியெனக்
கால்பெயர்த் தொல்கிநாணிக்
கையொதுக் கித்தனது முலைமுகங் கொட்டுங்
கவின்வெள்ள மள்ளியுண்டு
வண்ணவான் குன்றுநோற் பூரித்த திண்டோள்
மணிவாயின் முத்தமருளே
மழலைகனி யமுதுகு தரங்கைவே லாயுதா
42✓
ஒள்ளொளித் தும்புபொன் மணிகுண்ட லங்களு
மொண்ணித் திலச்சுட்டியு
மொளிர்மணி குயிற்றிடுங் கண்டசர முஞ்சுடரு
மொழிகெழிற் புயவலையமும்
நள்ளிருட் படலமொண் டுண்டுதேக் கிட்டெறியும்
நாகிளம் பருதிஇருள
நல்லொளி யெறித்திடுந் தமனியக் கொண்டையும்
நவமணித் திருமாலையும்
புள்ளலம் புங்கனக கிண்கிணித் தொங்கலும்
பொற்றறம் வளர்க்குமுமையாள்
பொற்புற வணிந்துலகு காக்குநா யகனருட்
புனிதனிரு கைக்கொடுப்ப
வள்ளலொடு சிங்கா தனத்துறை யிளங்குமர
மணிவாயின் முத்தமருளே
மழலைகனி யமுதுகு தரங்கைவே லாயுதா
மணிவாயின் முத்தமருளே. 42
43✓
கார்கொண்ட கொண்டலுந் தண்டேன் பிலிற்றுபைங்
காயாவின் மலர்வண்ணமுங்
கட்டழித் திட்டொளி விரிக்குங் கவுத்துவக்
கதிரொழுகு மணிமார்பினிற்
சீர்கொண்ட பங்கயச் செல்வியிரு கொங்கைச்
செழுங்கடாக் களிறுமுட்டிச்
சென்றுழு துழக்கமகி ழுஞ்சனக் குன்றனைய
திருமா றனக்குமருகா
ஊர்கின்ற தென்றற் புனிற்றிளங் கன்றுசந்
தொண்மலர்க் காவளைந்திட்
டொள்ளிதழ்த் தாமரைத் தாதிற் புரண்டுவந்
தோ..........துலாவும்
வார்செம்பொன் மாளிகைச் சோணாடு காவலா
மணிவாயின் முத்தமருளே
மழலைகனி யமுதுகு தரங்கைவே லாயுதா
மணிவாயின் முத்தமருளே. 43
44✓
பச்சைப் பசுங்கொண்ட றுளிமுத்தம் நீனிறப்
பங்கே ருகத்தின்முத்தம்
பங்கப் படும்பசுஞ் செந்நெலொளி முத்தமரி
பட்டிடும் பணிலமுத்தம்
அச்சினிற் கடைபடும் வேய்முத்தம் வெடிபடு
மருங்கழை யளித்தமுத்த
மரியவொள் வாளினிற் கழிபடு மிப்பிமுத்
ததியபத் தோடிருக்குமே
யச்சுடர்த் திங்கள்வெண் முத்தம்நஞ் சொடுபழகும்
விலையேற்கு முத்தம்யாவும்
விமலவுன் செங்கனிப் பவளவாய் முத்தமோர்
விலைவரம் பறியலாகா
வச்சிரக் கரதலர் தேவசே னாதிபா
மணிவாயின் முத்தமருளே
மழலை கனியமுதுகு தரங்கைவே லாயுதா
மணிவாயின் முத்தமருளே. 44
45✓
கரிவாளை நேர்விழிப் பூண்முலை யுழத்தியர்
கைநெரித் தொல்கிமாழ்க
கடிமலர்ச் செந்தா மரைக்கா டுழக்கியோர்
கார்மயிற் பேடுபோலத்
திரிவாளை யிந்திர ரில்லிதென் றையுறச்
சேர்ந்துமேற் கமுகுகீறிச்
செங்காலி யாமெனக் கட்டுணைச் சாயலைச்
சேர்களை யெனப்பிடுங்கிப்
பரிவாளை மென்முலை பட்டால் சுரந்துற்ற
வோர்பாலினிற் சென்றுமுட்டி
பைம்புயற் படலங் கிழித்திழுமென் னோசையிற்
பதினாரை யோடிறங்கும்
வரிவாளை பாய்வயற் சோணாடு காவலா
மணிவாயின் முத்தமருளே
மழலைகனி யமுதுகு தரங்கைவே லாயுதா
மணிவாயின் முத்தமருளே. 45
46வேறு✓
அமரர் பயமு முனிவர் துயரும்
அசுரர்வரமு முகக்கவே
யருண கிரண அயிலை விடுமோர்
கைத்தலர்...............
தமர மகர முரவு கடலை முகபடலை
வடைத்த மால
சருவு மருக வுருகு மடியர்
தமது பெரிய சித்தமார்
திமிர மரியு முதய தபன
சிறுவ பெரிய வுத்தமர்
தெரிய விறைவர் பொருளை விரிய
மதுரை தனிலு ரைத்தவர்
குமர தறவர் சிறுமி தழுவு
கொழுந தருக முத்தமே
குலவு தனத புரியின் முருக
குரவ தருக முத்தமே. 46
47வேறு✓
அனக விதுல வசல வமல
வகள சகள சற்குண
வமிர்த வசன சுசன வபய
வதிக சுகமு நிஷ்களா
சனக சனக முனிவர் பரைச
சதுர வதர வித்திரு
சகுண நிபுண விபுதர் திலக
சலச நயன பொற்புயா
பனக வரைசு கடக சடில
பவள கிரிவ ளைத்தென
பரமர் குடிலை வினவி யெளிது
பணிய மொழியு ரைத்தவா
குனகு மழலை யொழுகு மழக
குழக தருக முத்தமே
குலவு தனத புரியின் முருக
குமர தருக முத்தமே. 47
வேறு✓
அதல விதல சுதல நிதல
அவனி குலைய வெற்பலா
அதிர வுததி சுவர வனலு
மவிய வடவை யுட்கவே
கதிகொ ளிறுதி வளியி னரசு
கடின விரைவு முட்கவே
கடவு ளெவரும் வெருவ மருவு
கருது மொரு நொடிக்குளே
சதன சதன மெனவன் னனுசர்
தகுதி முனிவ னர்த்ததோர்
@todo merge. this with following stanza
48✓
தழலி லுதைய பருதி பொருவு
தகரை விடுமோர் வித்தகர்
குதலை வசன வமர ரிறைவ
குரவ தருக முத்தமே
குலவு தனத புரியின் முருக
குமர தருக முத்தமே.
49வேறு✓
கனைக டற்றெண் டிரைமு ளைக்குங்
கவடு வைக்குந் தருவையே
கருதி வெட்டுங் கமல மொக்குங்
கரத லத்தெங் கடவுளே
தினைவி ளைக்கும புனமளிக்குஞ்
சிறுமி மெத்தென் றிளகுமோர்
திருவடிச் செந்தளிர் முடிக்குஞ்
செழும ணிப்பொன் மகுடமே
புனமயிர்ந் தந்தலை தலைக்கும்
பொருளில் பொய்ப்பின் சமயமார்
புக ரிருட்டின் குவ டிடிக்கும்
பொழிகதிர்ச்செம் பரிதியே
தனிமுகற் செம்பொரு ளளிக்குந்
தனைய முத்தந் தருகவே
தனதை யுற்றங் கருள் கொழிக்குந்
தலைவ முத்தந் தருகவே.
50✓
சிலையெனப் பொன்மலை குழைக்குந்
திகழ் மதிச்செஞ் சடையர் வாழ்
திருநுதற் கண்மலர் முளைக்குந்
திகழொளிச் செம்ப வளமே
முலையெனச் சங்கனக வெற்பின்
முகில் சுமக்குங் கிரியின் மான்
முதிர் கருப்பங் கொள வுதிக்கு
முழுமணித் தண்ட ரளமே
யலைபுரட்டுங் கடல் கடக்கு
கடல வெற்பும் பொடி செய்வான்
அவனி யுட்கும்படி நடக்கு
மரிமுகற் றிண்கு வடுநேர்
தலை யுருட்டுங் குலிசம் வைக்குஞ்
சதுர முத்தந் தருகவே
தனதை யுற்றங் கருள் கொழிக்குந்
தலைவ முத்தந் தருகவே.