முருகன் App
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
சிறுபறைப்பருவம்8 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்

சிறுபறைப்பருவம்

69✓
இந்தாரு மண்டலத்தகடு தடவும் பொன்னி
னெரிமணி குயிற்றுமாடத்
தேத்திளங் கொங்கையார் சதுமுறை நடிப்பதற்
கிணைதர முழக்கு முழவும்
நந்தாத நான்மறை முழக்குந் தழற்கணார்
நவிலுமுத் தமிழ் முழக்கும்
நராதிபர் நடாத்தும் வெங்கரி முழக்குங்கலின
நற்பரி முழக்குமமரர்
இந்திராதி வேதன் பசுந்துழாய்க் கொண்டலவ
ரேறுமூர்த் தியின்முழக்கு
மெழுகட லடக்கிப் பகீரண்ட கோடியி
னிரங்குந் தரங்கை யமரர்
சிந்தா மணிக்குமர வீரவே லாயுத
சிறுபறை முழக்கி யருளே
திசைக்கரி திடுக்கிட மயிற்பரி நடத்திநைவ
சிறுபறை முழக்கி யருளே.
70✓
கல்லுற்ற திண்டோள்கள் பன்னிரண் டுடைநின்
கட்கடை சிவந்த ஞான்றின்
கடுவலிப் பெருவெள்ள மவுணக் கொடுந்தானை
கண்டு கூட்டுண்ண வாவி
கொல்லுற்ற செங்கட் கருங்கூற் றிவர்ந்திடுங்
கொடும்பகட் டெருமை யார்க்குங்
கொழுங்கழுத் திடுமணியி னார்ப்பென்று நிருதர்தங்
கோமகளிர் வயிறலைப்ப
அல்லுற்ற கற்றைக் கருங்குழலின் மகளி
ரயிராணி கேள்வன் மிகுத்
தபிடேக மின்றென முழக்கு பொன்முசறையு
மார்ப்பெனக் கைகள் கூப்பச்
செல்வத் தரங்கையாய் ஒருமுறை மலர்க்கையாற்
சிறுபறை முழக்கி யருளே
திசைக்கரி திடுக்கிட மயிற்பரி நடத்திநைவ
சிறுபறை முழக்கி யருளே.
71✓
நெட்டுடற் செந்தாழை முப்புடைச் செங்கனிகள்
நிமிர்தலைக் கழுகு தூக்க
நெடுமடற் குலைசாய்ந்து முடவுட் சினைப்பலா
நெக்குமுட் புறத்தீங் கனிக்
கொட்டைச் செழுந்தேன் பொதிந்த பொற்சுளைபக்க
கோழரை யரம்பை சாய்க்குங்
கூருகிர்ப் புலியடிப் பொற்புறத் தேங்கனிகள்
குலகுலென் றுதிர்த்து வீழும்
வட்டச் செழுந்தோட்டு வெண்டாமரைக் காட்டு
வாவிக்கு ளாடுமடவார்
வதனவெம் பாற்கடற் றெண்டிரை முகட்டெழும்
வளரொளித் திங்கள் காட்டும்
சிட்டர்புக ழப்பெறு தரங்கா புரிக்குமர
சிறுபறை முழக்கி யருளே
திசைக்கரி திடுக்கிட மயிற்பரி நடத்திநைவ
சிறுபறை முழக்கி யருளே.
72✓
இருள்பிட்டு விட்டெரியும் வெங்கதிர் பரியிரத
மீர்க்கும் பசுங் குரகத
மெரிமசனிச் சிகரியிற் செம்பொற் றசும்பினி
லிடறித் தெறித்த மணியும்
அருள்பெற் றிடத்தொழு மிந்திராதி தேவர்மற்
றரியயன் முதற் றேவர்தம்
அவிரொளிப் பொன்முடியி னந்திகைப் பொற்பிரம்
படிபட் டுதிர்ந்த மணியு
முருமொய்த்த நிதியறை திறக்கநின் றேற்றவர்க்
குதவிடை யுதிர்ந்த மணியு
முருநலார் பொற்கலன் மகிணரை வெறுத்தெறிய
உகுமணியு மின்னி னுதிரத்
தெருமுற்றுநவ ரெத்தின மழைபொழி தரங்கைவேள்
சிறுபறை முழக்கியருளே
திசைக்கரி திடுக்கிட மயிற்பரி நடத்திநைவ
சிறுபறை முழக்கி யருளே.
73✓
விரைக் குங்குமச் செழுஞ்………கிகாங்கையென
விற்பிற் சுமக்கு மடவார்
மெல்லிதழ்க் கொப்பின்மை கண்டுசெம் பவளங்கள்
மெய்புரண் டுகளுமொருபால்
நிரைக்குஞ் செழுந்தூவி யனமகளிர் நடைகண்டு
நெஞ்சம் புழுங்கு மொருபால்
நிலவுரு நகைகண்டு முத்தொளி வெளுத்துடலம்
நெக்குருண் டோடு மொருபா
லிரைக்குங் கழிக்கரைச் செம்மேனி யலவனு
மின்முழந் தாள்கள் நோக்கி
யீரளைப் பனியுட் செல்வதும் வருவதுவு
மினையுறா தெண்ணி யென்னாத்
திரைக்குந் திரைக்கடற் சூழுந்த ரங்கையாய்
சிறுபறை முழக்கி யருளே
திசைக்கரி திடுக்கிட மயிற்பரி நடத்திநைவ
சிறுபறை முழக்கி யருளே.
74வேறு✓
இயலுமிசை மதுரைதனி லிறைவர்பொரு ளினியவழு
தெளிதினில் வடித்த புலவர்
இனிதடி யரிடுமலரு மெயினர்மகள் பதமலரு
மிதமுற முடித்த தலைவர்
மயிலிமய சயிலமகள் வயிறுளைய வெகு………
வரிசையொடு பெற்றமணியே
மறைமுடியி லடிநடுவில் முனிவருள முளரிதனில்
மருவிநட மிட்ட சுடரே
கயவர்பிசி சசனரிடு கடவுளர்கள் கலுழ்கொடிய
கடியசிறை விட்டதுரையே
கடகளிறு மருவுபிடர் அமரரிறை குலவவொளிர்
கதிர்முடி கவித்த அரசே
செயவிசய தனதபுரி மருவுகுரு பரமுருக
சிறுபறை முழக்கியருளே
திருகுமன நிருதவிருள் பருகுதின கரகுமர
சிறுபறை முழக்கியருளே.
75✓
அடலவுணர் வயிறதனி லசுரதிரி புரமதனி
லழலெரி கொளுத்து குழகா
அமரர்களி முகமலர அரமகளிர் வயிறதனி
லமுதசன மிட்ட வழகா!
வடகுவடு குழையவிள நகைகொளுவு மிறைமகிழ
மறைமொழி யுரைத்த குருவே!
வழிபடுனர் மிடியகல வருபிணியி னிடரகல
மலரரு டழைத்த தருவே!
கடகரியின் மிடறொடிய யெயினலகு கிழியவடர்
கருமுகில் தனக்கு மருகா!
கருதுகுறு முனிபணிய வொருகுடிலை தனைவிரவு
கருணையி லுரைத்த முருகா!
திடரின்விளை வயலின்வளை தவழ்தன புரியிறைவ
சிறுபறை முழக்கியருளே!
திருகுமன நிருதவிருள் பருகுதின கரகுமர
சிறுபறை முழக்கி யருளே!
76✓
முகுளவிர கனிவகையும் நிலவுமலர் முகைவகையு,
முழுகொளி பழுத்த கவினார்
முதுரைநிறு கதலிவனம் வனசமலர் கமுகுவன
முறைமுறை நிரைத்து மணமார்
அகிலுருகு புகைகுமுறு மளகமலர் கொடிநிரைக
ளருமணி குயிற்று கடைவா
யணியணியில் விரவவெழு பவனிவரு தனதரினி
யமுதருள் கொழித்த கடலே!
மகிதலமெ யதிரவிர லூரசுபதி முடிநெரிய
வளரொளி விரித்த சிறையால்
மருவுமுடு கணநிரைகள் கலகலென வுதிரவெளி
மழைமுகடு பொருத்தவழகார
திகிரிகிரி கிடுகிடென நடனமிடு மயிலழக
சிறுபறை முழக்கியருளே
திருகுமன நிருதவிருள் பருகுதின கரகுமர
சிறுபறை முழக்கியருளே.
77✓
அளிகுமிறு மலரளத தளவநகை முலைமுகுள
வரிவையர்த மக்கொருமுதே!
அகமுருகு மடியவர்கள் செனனவலை கடல்நடுவ
ணருளுதவ வுற்றபிணையே!
வெளியிலரு வெளியில்நட மிடும்வெளியில் நுதலிலொரு
வெளியென வுதித்தவொளியே!
மிருசமய மறுவகையும் விரவியவர் வரகருதும்
விழைபொரு ளளித்த பொருளே!
வொளிர்கமல மறுவகையு மொருவிமறை பணியுபத
முணர்வரிய சித்தினுருவே
யுருவுமல அருவுமல யெனமுனிவர் கருதுமவர்
உரைமுடியு முத்திநிதியே!
தெளிய வருபுகழ் தனதபுரி வருமுருக
சிறுபறை முழக்கியருளே!
திருகுமன நிருதவிருள் பருகுதின கரகுமர
சிறுபறை முழக்கியருளே!
78✓
உனதுபுக ழெனதுமொழி புரைபயிற லலதொருவ
ருறுபுக ழுரைக்கவறியா
துனதுதிரு வுருவறியு மெனதுவிழி யொருவரெழி
லுருவது குறிக்கவுமலா
துனதுதுரை யடிபணிய வளையுமல தெனதுசிர
முலகொரு வருக்கும் வளையா
துனதுதிரு மதிளைவலன் வருவதல தெனதுபத
மொருவரின் நடக்க வசையா
துனதுபத மலரிலிரக் குவதல தெனதுகர
மொருவரை யிரக்க விரியா
துறுதியிது வெனவறிதி லெனையடிமை யெழுதியரு
ளுதவுத லுனக்கோர் கடனே
தினதினென வளிகுமிறு தனதபுரி வருமுருக
சிறுபறை முழக்கி யருளே!
திருகுமன நிருதரிருள் பருகுதின கரகுமர
சிறுபறை முழக்கியருளே.