தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
சப்பாணிப்பருவம்4 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
சப்பாணிப்பருவம்
31✓
அமராடு திண்சிலைப் பிசிதா சனச்சேனை
யட்டிடத்தொட்டஞாட்பி
னருகொடி யொகு …………..ட்
டழல்வாய் நிணங்கடுக்கத்
திமிராடு சென்னரிக் குலமுளை பல்லியஞ்
செய்யவொள் ளிருநாணிற்
செங்கட் கருந்தலைத் தா.......கொத் திட்டுமேற்
செங்குடாத் தொங்கல்சூட்டி
கமராடு வற்ற.....வுட் பெய்ப் பசுந்தோற்
கடிமணக் கூறையிட்டுக்
கன்னியென் றொருபேய் கழுத்திற் புனைந்துசொற்
கலியாண மாகவுண்ணச
சமராடு செங்களம் பட்டிடக் கண்டவேள்
சப்பாணி கொட்டியருளே
தனதபுரி வடிவேல மிர்துவசன வுமைபால
சப்பாணி கொட்டியருளே. 31
32✓
வண்டார் நறுந்துணர்க் கொன்றையந் தொங்கலணி
வான்பொற் குவட்டிலேறி
மலைவல்லி கொங்கைக் கடாக்களி றுழக்குமணி
மார்பில்வெண் புழுதியாடி
விண்டாவு செஞ்சடைக் காட்டிடை முளைத்தெழும்
வெள்ளிக் குருத்தின்மிளிரும்
வெண்பிறைப் பாதியிற் கேழலொண் கோடொற்றி
மிளிர்முழுத் திங்களாக்கிக்
கொண்டார் பணிப்பணம் விரிப்பப் பயத்தொடுங்
குறுகுறு நடந்து கங்கைக்
குளிர்துறைக் கக்கரைக் கிக்கரை யுங்குதலைக்
குடமெனப் பற்றிநீந்தித்
தண்டாது விளையாடு சண்முகக் குழவியே
சப்பாணி கொட்டியருளே
தனதபுரி வடிவே லமிர்துவசன உமைபால
சப்பாணி கொட்டியருளே. 32
33✓
செங்காவி யாவியிற் கட்குட முடைந்தனத்
திருமுக மலர்த்துமுளரிச்
செங்காடு மேய்ந்துதங் கடைவாய் குதட்டிடுஞ்
செங்கட் செருத்தன்மேதி
தங்கா தெழுந்திருகி வட்டமிட் டுயர்முலைத்
தையலார் மணிமிடற்றிற்
றழைமடற் பூகப் பொதும்பரிற் சென்றுதன்
றனிமழக் கன்றையுள்ளிக்
கங்கா நதிபெருக் கென்னப் பருஉமுலைக்
கண்டிறந் தூற்றவோடுங்
காட்சிவெண் பாற்கடற் றெண்டிரை குடித்தெழுங்
கரும்புய றுளித்தல்மானுஞ்
சங்க்ராம வீதிவளர் சோணாடு காவலா
சப்பாணி கொட்டியருளே
தனதபுரி வடிவேல மிர்துவசன உமைபால
சப்பாணி கொட்டியருளே. 33
34✓
ககனமுக டக்குகிழி தரதிமிர்ந் திலகுமொரு
கடவுள்வட மேருகிரியிற்
கதிர்விடுங் கொடுமுடியோ ராயிரத் தெட்டுமொரு
கையிற் பறித்துவீசி
நகைபுரிந் துடுக்கணமோ ருண்டையிற் செய்துதிரை
நரலையிடு மதன கிரியை
நறநறென விற்குனித் தமரர்முது சூளையவெதிர்
நற்சுண்டு விற்றெ றித்து
மொகுமொகென் றெழுகடற் றெண்ணீர் குடித்தெரி
முழங்கிக் கனற்றும் வடவை
முற்றுமவி யப்புரிந் திந்திராதி தேவரு
முளரிப் பொகுட்டி லயனும்
தகவரு சகங்களுங் கலங்கவிளை யாடுவோய்
சப்பாணி கொட்டியருளே
தனதபுரி வடிவேல மிருதுவசன வுமைபால
சப்பாணி கொட்டியருளே. 34
35✓
பொதுவர்மனை வயினாலு நிரைநிவந் தொருமலர்ப்
பொற்பதந் தூக்கியாய்ச்சி
பொருபடைக் கண்படை யுணர்ந்தொருகை யரைமணிகள்
ஒத்தவொரு கையளைந்து -
உதிர்கனிச் செவ்வாய் மலர்ந்துகவ் கவ்வென்ன
வூற்றுக்கின் றமைதியவள்தான்
உறுக்கிச் சினத்தான் மழக்கன்றி யாப்புறும்
வொண்கயிற் றாற்சிமிழ்ப்பக்
கதுமெனச் செந்தா மரைக்கண் பிசைந்தழுது
கைவிதிர்க் கட்டோடேகி
கவடுகொடு நெடியமரு தொடியவொரு காலோச்சு
கருணைசொரி புயலின்மருகா
சதுரநிசி சரர்வயிறு கரிபெருக வருமுருக
சப்பாணி கொட்டியருளே
தனதபுரி வடிவேல மிருதுவசன வுமைபால
சப்பாணி கொட்டியருளே. 35
36வேறு✓
கந்த மலர்க்குழ லிந்திரை பூட்டிய
கட்டரை ஞாணிடையிற்
கட்டிய கிண்கிணி கிண்கிண் கிணெனக்
கங்கை மகட்புனையுஞ்
சந்த மலர்க்கழ லிட்ட சதங்கை
சலென சலஞ்சலனத்
தமனிய முத்து வடங்கலி னென்னத்
தண்டை சிலம்பறவும்
உந்தி குழைந்திடை துள்ளி யெழுந்திரு
காலு மெடுத்துமையாள்
ஒண்பொன் மடித்தல மீது விழுந்தரு
டாதை யுரத்துதையுங்
கொந்தலர் பம்பைக் குஞ்சிக் குமர
கொட்டுக சப்பாணி
குலவு தரங்கை யருட்கதிர் வேலவ
கொட்டுக சப்பாணி. 36
37வேறு✓
அஞ்சொன் முலைக்கொடி யறம்வளர் மாதுகோ
தாட்டு மருங்கனியே
யமரர் மடப்பிடி புணர்கல விக்கட
லாடு மிளங்களிறே
விஞ்சு மலர்ப்பிர மாவு மதிப்பிடும்
வேத விழுப்பொருளே
மெய்த்தவர் பற்றிய சிற்சுக ரூபக
விரிகதிர் மரகதமே
தஞ்ச மெனப்பணி விண்ணவர் காவல
சற்குண பூதரமே
தத்துவ ஞானசி காமணி யான
சதாசிவ போதகனே
கொஞ்சு குறச்சிறு வஞ்சி மகளுக
கொட்டுக சப்பாணி
குலவு தரங்கை யருட்கதிர் வேலவ
கொட்டுக சப்பாணி. 37
38வேறு✓
அழலெழும் வாள வுணக்கட லுற்றம
ராடு பறந்தலையில்
அற்றுயிர் பெற்ற தெனக்குறை யுடல
மாடிட வோடியபேய்
முழவென மத்தக மால்கரி யிற்றலை
கொண்டு முழக்கவோர்பேய்
முதிரிரு குண்டல மொத்திய தாள
மெனச்சதி முறைகொட்டப்
பிழைபடு வாய்கடி மறந்தடல் வேலின்
பெருமை வழுத்தவோர்
பேய்ப்பிடி துகில்தா ளிசவுக் களியென்னப்
பேசி யளித்திடுபேய்ப்
குழுவுகள் குணலை கூத்துக........டவ
கொட்டுக சப்பாணி
குலவு தரங்கை யருட்கதிர் வேலவ
கொட்டுக சப்பாணி. 38
39வேறு✓
பராசரர் புத்திர மீனுரு நீக்கு
பரா.........விற் குறவா
பராவரு கற்பக தாரு மலர்க்கிளி
பாடுமி லங்கையிலே
யிராவண வல்லி புகுந்து பிடுங்கி
யடுங்கரி மாமருகா
வேத்து தொழும்பர்க ளுண்டுரு குஞ்சுவை
யூறுமி ளங்கனியே
சுராதிப வாரண பூரண ஞான
சுகோதைய சாகரமே
சுந்தர மங்கள பூதவ சகா
வண்டுது தைந்தளையுங்
குராவலர் பன்னிரு பொற்புய பூதர
கொட்டுக சப்பாணி
குலவு தரங்கை யருட்கதிர் வேலவ
கொட்டுக சப்பாணி. 39
40வேறு✓
முட்டு சமர்க்கள வவுணர் செடித்தலை
மூளைபி டுங்கிடுனாள்
மும்மத யானை யுடற்குறை கூல
முரிக்கும ருப்பெவையும்
வட்ட மலர்க்கொடி வளைய முறித்திடு
மரகத நற்கவிகை
வளமலி பாசடை தேரில் விழுந்திடு
மருங்கு குறட்குலமாய்
பட்டெறி பாந்தி லெழுந்துவி ழுந்தலை
பங்கய மாமலராய்
படுகளம் வாரிச வாவியெ னப்புகழ்
பாடிவி ழிக்கடையால்
கொட்டுத முற்கண நாதர்க ணாயக
கொட்டுக சப்பாணி
குலவு தரங்கை யருட்கதிர் வேலவ
கொட்டுக சப்பாணி. 40