தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
தாலப்பருவம்3 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
தாலப்பருவம்
21✓
கூறும் புவனம் படைத்தளித்துக்
கொழுவி யொடுக்கும் புத்தேளிர்
குறையுற் றிரந்து சூர்க்கொடுமை
கூறவருளு மையத்தே
சீறுங் குழந்தைப் பசிகொள்ளித்
தேளிற் சினவ வயிறெக்கிச்
செவ்வாய்ப் பவழத்திதழ் பிதுக்கித்
தேம்பிக் கமலக் கண்பிசைந்து
வீறுஞ் சிறுபுன் குரல்நெரித்து
விம்மி யழலுங் கவுரியனல்
“மிதித்தாள் போலக் கடிதோடி”
விரும்பி யிடுக்கிக் கண்டுடைப்பத்
தேறிச் சுரக்குந் திருமுலைப்பால்
தெவிட்ட வுண்டாய் தாலேலோ
செல்வத் தரங்கை நகர்புரக்குஞ்
சேயே (தாலோ) தாலேலோ!
22✓
அள்ளிக் கொள்ளும் இருட்பிழம்பி
லருள்வெண் டிங்க ணிலவுதெளித்
தனைய மலர்ப்பூங் குழல்வள்ளிக்
கன்பர்……பொ னுடங்குமிடைத்
துள்ளுங் கயற்கண் மால்யானை
துணைவர்த் தோளா மணிமுத்தே
தொழுவென் மழலைச் சொற்கேட்கச்
சொல்வா யொருகா லென்றழைக்கும்
வெள்ளம் புனற்பா கீரதிக்கு
விளம்பா தன்னை மடியேறி
விமலர் முகம்பார்த் திதழ்குவித்து
வேதத் குழவி விளையாடுந்
தெள்ளுங் குதலைக் கனிசொரியுஞ்
சேயே தாலோ தாலேலோ
செல்வத் தரங்கை நகர்புரக்குஞ்
சேயே தாலோ தாலேலோ.
23✓
வார்க்குங் குமப்பொற் கொங்கையுமை
வள்ள லுடனே விடையேறி
வாவிக் கரையில் வரக்கண்டு
மணிவாய் பவள மலர்ந்தோடிப்
பார்க்குங் குழவி யொன்றெழுந்து
பாடுங் குழவி யொன்றழுது
பார்க்குங் குழவி யொன்றுநக்கைப்
பவளந் திறக்கு மொருகுழவி
யார்க்குஞ் சிறுகிண் கிணிக்காலி
லாடுங் குழவி யொன்றுபுன
லளையுங் குழவி யொன்றினைய
வளவில் விளையாட் டயர்ந்துமையாள்
சேர்க்குங் கருணைத் திருமேனி
யொன்றாய் வந்தாய் தாலேலோ
செல்வத் தரங்கை நகர்புரக்குஞ்
சேயே தாலோ தாலேலோ.
24✓
காளகூட விடங் கொழிக்கக்
கடுக்குந் துளைவா ளெயிற்றுரகக்
கர கங்கணத்துக் குணக்குன்றின்
கண்ணின்மணியே யணிசக்கிர
வாள கிரிதான் வீதியென
வளவாய்ச் சூட்டு நெடுங்கழுத்து
மணிப்பொற் றோகைப் பரிநடத்தும்
வல்ல ருலம்வாழ்பன்னிரண்டு
தோள கூடற்ற னின்மறையுந்
துளங்க விளங்குந் தமிழ்க்கடலிற்
போயி லறவர் பொருள்விரிக்குந்
துய்ய புலவர் சூரிடுபுத்
தேளிற் காலிற் றளையவிழ்க்குஞ்
சேவ்வே லுழவா தாலேலோ
செல்வத் தரங்கை நகர்புரக்குஞ்
சேயே தாலோ தாலேலோ.
25✓
சுருட்டுந் தரங்கைக் கடல்வயிறு
சுவறக் குடிக்குங் காளமுகிற்
றோன்றுஞ் சுடரிற் சாமளப்பூஞ்
சூட்டு மோட்டுக் கார்மயிலின்
மருட்டுந் துணைக்கண் கவர்வனப்பு
வளர்பன் னிரண்டு திண்டோளு
மருவுஞ் சந்திரோ தயமுகமு
மலர மாலுஞ் சேலினத்தை
வெருட்டுங் கருங்கட் கலாமகட்கு
வேந்துஞ் சேவித் தருகுவர
வெள்ளி மலைமேல் வீற்றிருக்கும்
விரும்புந் தாதை யன்னையுளந்
தெருட்டுந் துணைக்கண் மணிகுளிர்ப்பச்
செல்லு முருகா தாலேலோ
செல்வத் தரங்க நகர்புரக்குஞ்
சேயே தாலோ தாலேலோ.
26வேறு✓
மறிதிரை சுருட்டுகடல் கொழிதரு மணித்தரள
மதியொளி திரட்டியன வோர்பாலே
வளர்சிறை யனப்பெடைகள் பிடிநடை நுளைச்சியர்கள்
மடநடைகள் கற்றுலவு மோர்பாலே
செறிபொழில் மலர்ப்புனையின் விளரியை யிசைத்துநிதி
சிறுகிழி யவிழ்க்குமளி யோர்பாலே
திருமல ரிதழ்க்குவளை விழிகளை நிகர்க்கவுறு
செறிதவ முஞற்றுதட மோர்பாலே
வெறிகமழ் முடப்பலவி னுதிர்களை யடைத்தமடை
மிகுகுற வுடைத்துலவு மோர்பாலே
வெளிமுகட ளக்கமளர் கனககிரி யொப்பவயல்
விளைசெனல்கள் கட்டுமலை யோர்பாலே
அறிஞர்கடு திப்பவள மருவிய புகழ்த்தனத
னரியநக ருக்கதிப தாலேலோ
வனுபவ விசித்திரமயில் நிபுணகணி முத்தமிழ்சொ
லறுமுகவ வச்சிரதர தாலேலோ.
27✓
தனதட முகுட்குமரி யிமசயில புத்திரியுமை
தருணவதி புத்திரமயில் வீராசேர்
சததள மலர்க்கடவுள் பிரணவ முரைப்பநரை
சதுமுடி புடைத்தவிற லானாவோர்
வளசரர் வளர்த்தகிளி யிளகுதன சக்கிரகுல
வரைகளை யெடுப்பனிரு தோளாலே
மலரடி பிடிப்பன்வரி சுரிகுழல் முடிப்பன்மகிழ்
மதகலை படிப்பனெனை யாளாய்நீ
யெனவவள் மனக்கடின கலுமுருக விச்சைசொலி
யிதழமுது துய்த்த விரகாளாசீர்
ரெழுதரிய கட்டழக சரவணப வக்கடவு
ளிறைமுருக சத்திதர தாலேலோ
அனகஅது லப்பிறவுட் குணதர தயித்தியர்செய்
யமரர்சிறை விட்டதுரை தாலேலோ
அனுபவபுகழ்த் தனதபுரி முருக முத்தமிழ் சொல்
லறுமுகவ வச்சிரதர தாலேலோ.
28✓
துதிபரவு நற்சுருதி முடியினட மிட்டதொரு
சுடரின்வரு சித்துருவ தாலேலோ
சுகவசனி நற்கரியி னொருமகட் னக்கினிய
துவரிதழின் வித்துரும தாலேலோ
மதிவதன சட்கமல மனமொழியு மெட்டரிய
வளரொளி பரப்பிரம தாலேலோ
மலைமக டனக்குமலை புனல்மக டனக்குமொரு
மகவென வுதித்தமணி தாலேலோ
விதியையும் விதித்தவிதி யென…. விழிக்கவுஞர்
மிகுசிறை விதித்தவிதி தாலேலோ
விமலனக லத்துருவ மலர்விசிகம் விட்டுவரு
விறல்மதனன் மைத்துனவ தாலேலோ
அதிமதுர முக்கனியின் வடிசுவை யெனப்புகலும்
அமிழ்த மழலைக்குழக தாலேலோ
அனுபவபு கழ்த்தனத புரிமுருக முத்தமிழ்சொல்
லறுமுகவ வச்சிரதர தாலேலோ
29✓
தொண்டர் தமக்கெளியாய் துங்க சுமங்களனே
தூயா மாமாயா
சுந்தர சொற்கமெலா…….
………னேதுரா பேராளா
மண்டுக ளத்தவுணர் சிண்டுபி டுங்குமயில்
வாகார் பாகார்சொல்
வஞ்சிகுற……..மே
வானார் சோணாடா
அண்டர் தமக்கரைசே சங்கரி தன்புதல்வா
ஆனா கோனாகும்
ஐங்க……..ங்கவர் தந்தவமே
யாலா மேலோனே
தண்டமி ழுக்கருள்வாய் தென்ற ரங்கைப்பதியாய்
தாலோ தாலேலோ
………குருவே யிங்கித செங்குமரா
தாலோ தாலேலோ.
30✓
முந்தை மறைப்பொருளே வஞ்சக ருக்கிருளே…..
………………
……கணுக்கரியாய் கண்டக ருக்கெரியாய்
மூள்வாய் தாலேலோ
பந்த மொழித்தருள்வாய் சிந்தை……யே
பாலா தாலேலோ
பண்பு மிகுத்தசொலா யும்பர் துதித்திடவாழ்
பாதா தாலேலோ
கந்தம…………தைவிழிக்கருவே
காவே தாலேலோ
……கண்கள் களித்திடவார் செம்பொ னொளிக்கிரி
யாகார் தாலேலோ
……………குயிரேவந்த அருட்பயிரே
தாலோ தாலேலோ.
………இங்கித செங்குமரா
தாலோ தாலேலோ