முருகன் App
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
வாரானைப்பருவம்7 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

வாரானைப்பருவம்

51✓
தந்தா வளமுன் அழைப்பமனஞ்
சற்றுந் தரியா தெழுந்துகுல்லைத்
தாமம் சரிய உடைசரியச்
சக்ரா யுதத்தை முன்நடத்திச்
செந்தா மரைப்பெண் புவிமடந்தை
திகைப்போ டெழுந்து பின்தொடரச்
சேடன் முதுகும் அவன்மனமும்
திருப்பாற் கடலும் வெளிறிவெஃகப்
பைந்தார்க் கருடன் கடைக்கண் அருள்
பார்த்து நேரே பறந்துவரப்
பாரக் கொடிய முதலைவதைப்
படவும் பாதம் தரைப்படவும்
வந்தான் மருகா முருகாசெம்
மலையே வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
52✓
வெண்சா மரைபோல் பலவிதமாய்
விரிந்த மனத்தின் கருவியெல்லாம்
வெவ்வே றாகப் பகுத்தறிந்த
விநயம் அறிந்தங் குனையறிந்து
கண்சா றொழுக விம்மிவிம்மிக்
கரைய அழுது கசிந்துருகிக்
களித்துச் சிரித்துக் குதித்தாடிக்
கவினாக் குளறத் துதித்திடுவோர்
எண்சாண் உடம்பும் இனிக்கமகிழ்ந்
தெங்கும் பெருகி அலைமோதி
இரண்டு வினையின் கரைகள்கடந்
தெழுந்த பரமா னந்தம்எனும்
வண்சா கரத்தில் உதித்தசுதை
மருந்தே வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
53✓
சினந்தான் மிகுந்து பொருஞ்சூரன்
தேவி தாலி தீப்புகுதத்
திறல்சேர் அவுணர் மனைவியர்கள்
திருநூல் இழந்து கைமைஎய்த
அனந்தான் வெளிற நடையிலும்
அழகு கசியுங் கலைமகளும்
அரம்பை மாரும் செழுந்திருவும்
அணியுந் திருமங் கலந்தளைப்பக்
கனந்தாழ் குடுமி மலையரசன்
கரநீர் வார்க்க மேனைகண்டு
களிக்க அமரர் துதிக்கஉமை
கழுத்தில் ஒருமங் கலநாணை
வனைந்தான் இலகு திருநுதற்கண்
மணியே வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
54✓
அயல்சூழ் நாரை கணைக்கால் கண்
டணுகி அணுகிப் பின்தொடர
அன்னந் தோற்க நடந்துகளை
அகழ்ந்தே உறுப்பின் பகைதீர்த்துப்
புயல்சூழ் மலைபோல் முலைகள்தொறும்
பூட்டு நீல வடம்புரளப்
பொன்னங் கொடிபோல் ஒல்கி ஒல்கிப்
பொருந்து மருத நிலம்குலவுங்
கயல்சூழ் விழியின் கடைசியர்கள்
கருத்திற் புலவி தவிரஎன்று
கருதி அவர்கள் புறந்தாளைக்
கமடம் இதென மள்ளர்பற்றும்
வயல்சூழ் பண்பைத் திருநகரின்
வாழ்வே வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
55✓
அனையுங் கயிலைப் பெருமானும்
அங்காப் புடனே மார்பிலெடுத்
தணியச் சமைத்த பதக்கம்என
அமரர் முனிவர் அதிசயித்து
நினையும் படிக்கு விளையாட்டு
நிகழ்ச்சி புரிந்து மேருஎனும்
நெகிழ்ந்த பசும்பொன் மலைமீது
நேசத் துணைவர் இலக்கரொடு
முனையும் கனிவும் பெறுவீர
மொய்ம்பன் முதலொன்பதுபேரும்
முதிரு நவமா மணிபோல
முயன்ற புடைசூழ்ந் திலங்க அங்கே
வனையு நடுநா யகமணிபோல்
வயங்கும் பெருமாள் வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
56✓
தோயாத் துகிலும் அரைவடமும்
சுற்ற வருக வருகவே
சுரந்து வடியுங் கடைவாய்நீர்
துடைக்க வருக வருகவே
ஆயாய் ஈன்ற கங்கைநன்னீர்
ஆட்ட வருக வருகவே
அருமைப் பதம்என் கண்ணிலெடுத்
தணைக்க வருக வருகவே
வீயா தொழுகுந் திருமுலைப்பால்
மிசைய வருக வருகவே
வீணை தெவிட்ட மழலைமொழி
விள்ள வருக வருகவே
வாயால் எனக்கோ ராணிமுத்தம்
வழங்க வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
57✓
முதிருங் கலைவா ணியும் தமிழ்மா
முனியோ டருண கிரிமுதலோர்
மொழியுங் கவிகொள் செவியால்என்
மோட்டுச் சிறுசொற் கேட்பதுபோல்
கதிர்கொள் வடிவேல் ஏந்தியசெங்
கையில் ஒருசெங் கோல்வாங்கிக்
கடம்பு புனைந்த திருப்புயத்திற்
காட்டு வேம்புந் தரித்தருளி
அதிருங் குரற்சே வலைஉயர்த்த
வாண்மைக் கொருமீன் கொடி உயர்த்த
தண்ட முழுதுந் தானாகி
ஐந்து தொழிலுஞ் செய்தவனோர்
மதுரை யரசு புரிந்தஉக்ர
வழுதி வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
58✓
எதிரும் புலவன் வில்லிதொழ
எந்தை உனக்கந் தாதிசொல்லி
ஏழைப் புலவர் செவிகுருத்தோ
டெறியுங் கருவி பறித்தெறிந்தே
அதிருங் கடல்சூழ் பெரும்புவியில்
அறிந்தார் அறியார் இரண்டும் இல்லார்
ஆரு மெனைப்போல் உனைத்துதிக்க
அளித்த அருண கிரிநாதன்
உதிருங் கனியை நறும்பாகில்
உடைத்துக் கலந்து தேனைவடித்
தூற்றி யமுதின் உடன்கூட்டி
ஒக்கக் குழைத்த ருசிபிறந்த
மதுரங் கனிந்த திருப்புகழ்ப்பா
மாலை புனைந்தான் வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
59✓
நாரி ஒருத்திக் கிடப்பாகம்
நல்கும் பெருமான் நுதல்விழியில்
நண்ணும் பொறியைப் பவனன் அங்கி
நடுங்கிச் சுமந்து கங்கையென்னும்
வேரிப் புனலில் புகுத்தஅவள்
வெம்பிப் பயந்து சரவணத்தின்
மீதில் இடமூ விருகுழவி
விரைந்து பிறந்தங் கழுதுவிம்மி
மூரி நெருப்பின் உடன்மடவார்
முலையுண் டுறங்கி எழுந்திருந்து
முளரிப் பூவில் தவழ்ந்திட ஐ
முகத்தோ னுடன்வந் துமைகரத்தால்
வாரி அணைக்கத் திரண்டதிரு
வடிவத் தொருவன் வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
60வேறு✓
பகைநிசி சரர்கள் மனதையும் இனிது
பருகிய அழகன் வருகவே
பரிபுரம் அதிர நடையில் கமல
பதமத களிறு வருகவே
மொகுமொகு மொகென நகைமணி கதற
முனிதகர் கடவி வருகவே
முருகவிழ் குடுமி அவிழ்வது அனைய
முலைதர வருக வருகவே
அகமெனு முளரி நறவொடு மலர
அருள்வெயி லிரவி வருகவே
அரனுமை மடிபொன் உரமிசை தவழும்
அறுமுக மதலை வருகவே
மகபதி முடியில் இலகிய சரண்என்
மனமிசை புனைய வருகவே
மணமலி குவளை தருதிரு மலையின்
வரும்ஒரு குழவி வருகவே.