முருகன் App
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
வாழ்த்து1 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

வாழ்த்து

காப்பு✓
வெள்ளைக் கணபதியை வேய்ந்தசடி லப்பெருமான்
பிள்ளைக் கணபதிதாள் பெற்றுரைத்தேன்-வள்ளியுடன்
வந்தகந்தன் காவி மலைபோல வாழவருள்
தந்தகந்தன் பிள்ளைத் தமிழ்.
அவையடக்கம்✓
பிள்ளைத் தமிழாம் பெரியபசுஞ் செந்தமிழை
வெள்ளைத் தமிழாய் விளம்பினேன்-எள்ளுறுமென்
புன்மொழியைக் காட்டிப் புனிதத் தமிழ்ப்புலவோர்
நன்மொழியை மேம்படுத்த நான்.