முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
அபிசேகங்களும் அவற்றின் பலன்களும்10 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

அபிசேகங்களும் அவற்றின் பலன்களும்

1✓
கொள்ளைபாலபி சேகப்பூசனை
ஆட்டலால்உறை - கூட்டலாம்!
தெள்ளுதேனபி சேகப்பூசனை
சிந்தலால்நலம் - நந்தலாம்!
நள்ளுநெய்யபி சேகப்பூசனை
பண்ணலால்பரம் - நண்ணலாம்!
வெள்ளைநீற்றபி சேகப்பூசனை
தீட்டலால்ஒளி - காட்டலாம்!
2✓
சந்தனத்தபி சேகப்பூசனை
அப்பலால்தனம் - உப்பலாம்!
மஞ்சளாலபி சேகப்பூசனை
பூசலால்கெடும் - மாசெலாம்!
குங்குமத்தபி சேகப்பூசனை
மங்கைமார்குலம் - பொங்கலாம்!
செங்கனித்தொகை சாற்றின்பூசனை
நல்கலால் செல்வம் - பல்கலாம்!
3✓
வண்ணத்தீந்தயிர் வார்த்துப்பூசனை
செய்தலாலமக - வெய்தலாம்!
வெண்மைமாப்பொடி தூவிப்பூசனை
வேட்டலால்கடன் - தீர்த்தலாம்!
கன்னல்சாற்றபி சேகப்பூசனை
விடுதலால்பிணி - கடிதலாம்!
துங்கத்தைலங்கொண் டாட்டிப்பூசனை
ஆற்றலாலசுகம் - போற்றலாம்!
4✓
நன்னறும்பஞ்சா மிர்தப்பூசனை
நடத்தலால்வெற்றி - கிடைத்தலாம்!
பன்னீராலபி சேகப்பூசனை
பொழிதலால்அடி - தொழுதலாம்!
தன்மைசேர்எலி மிச்சைப்பூசனை
பிழிதலால்நகிப் - பொழிதலாம்!
தெங்குநீரபி சேகப்பூசனை
ஊற்றலால் இன்பம் - சேர்த்தலாம்!
5✓
பனிமலர்அபி சேகப்பூசனை
படுதலால்பவம் - அடுதலாம்!
கனிகளாலபி சேகப்பூசனை
சொரிதலால்கனி - வுறுதலாம்!
கனகத்தாலபி சேகப்பூசனை
தூற்றலால்கனம் - ஏற்றமாம்!
மணிகளாலபி சேகப்பூசனை
வார்த்தலால்குடி - சீர்த்தலாம்!
6தமிழ்மொழித் தெய்வம்வாழ்க!✓
குமர!நின் முருகு வாழ்க!
குன்றுதோ றாடல் வாழ்க!
இமையவர் வல்லி வாழ்க!
எயினர்தம் வள்ளி வாழ்க!
அமருமென் மயிலே வாழ்க!
அஞ்சேவற் கொடியே வாழ்க!
தமிழ்மொழித் தெய்வம் வாழ்க!
தாரணி தோள்தான் வாழ்க!