முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
திருவேரகம் (சபரிமலை, குருமலை)5 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

திருவேரகம் (சபரிமலை, குருமலை)

32அந்தணர்க்கருளும் முருகன்✓
அறுவகைக் கடன்வ ழாத ஆதிநற் குடிப்பிறந்தும்
பெறுஉறை நாற்பத் தெட்டும் பெருநெறி ஒழுகிப் போக்கி,
அறன்நவில் நூல்கள் ஆற்றில் அக்கினி மகம்மூன் றோம்பும்
இறைதொழும் பொழுத றிந்த இருபிறப் பாளர் என்போர்.
33✓
நன்மடி யொடுநீ ராடி, நயந்தரைக் கசைத்து மார்பில்
ஒன்பதாய் இழைகள் சேர்முன் றொண்புரி நூல்த ரித்துத்
தம்கரம் தலைமேல் கூப்பிச் ‘சரவண பவ’என் றோதி,
இன்மலர் தூவிப் போற்ற ஏரகம் அமர்ந்த செவ்வேள்!