முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
திருச்சீரலைவாய்3 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

திருச்சீரலைவாய்

16திருச்செந்தூர்✓
கூரிய தோட்டி அழுந்திய தழும்பு
கூடிய புள்ளிகொள் நுதல்மேல்
சீரிய வாடாத் தெரியலும் அசைய,
சிலம்பிட இருபுற மணிகள்,
வீரிய நடைகொள் கூற்றுவன் நிகர்த்த
விலக்குதற் கரியவெல் விறலாய்,
மூரியிற் காற்று மூண்டெழல் அனைய
போக்குடை வேழமூர் முருகன்!
17✓
கிம்புரி, பதுமம், கேடகம், மகுடம்,
தாமமென் னறவகைத் திறனால்,
அம்பிறங் கினிது முற்றிய மின்னென்
றவிர்பல மணிமுடி விஞ்சச்
செம்பொலங் கொண்டு செய்செவி குழைகள்
திங்கள்சூழ் மீனெனத் திகழ,
வம்பறு கொள்கைப் புங்கவர் மனத்தில்
வந்தெழுந் தொளிர்அறு முகனே!
18ஆறுமுகங்களின் அருஞ் செயல்கள்✓
ஒருமுகம திருளொழிய கதிர்தருவ - தியலே
ஒருமுகம் தடியர்உய வரமருள்வ - தியலே
ஒருமுகமொண் மகம்புரிஅந் தணர்க்கருள்வ - தியலே
ஒருமுகமெய்ப் பொருள்களுரை விளக்குநில - வியலே
ஒருமுகம்வன் பகையழியச் செருச்சினம - தியலே
ஒருமுகமென் கொடியிடைவள் ளியொடுமகி - ழியலே
ஒருமுகமாய் உளமுருகி அழுவர்தமக் - கியலாய்
ஒருமுகமாய் இரங்கிஅக மகிழுவரு - முருகா!
19பன்னிரு கரங்களின் திருச்செயல்கள்✓
விசும்பேகும் முனிவோர்தம் அரணோம்பும் - ஒருகை,
விறல்கொண்ட இடைவைத்த திணையான - ஒருகை,
இசைவாகச் செயஆடைத் துடைமேல - தொருகை,
இபம்போக்கங் குசங்கொண்ட இணையான - ஒருகை,
திசையாவும் சுழன்றாடும் அயில்கொண்ட - தொருகை,
தெறுவாள்வேல் தடுத்தாள்கே டயங்கொண்ட - தொருகை,
பசைஞான ஒளியாம்முத் திரைகாட்டும் - ஒருகை
பரப்பாகம் புரள்தாமம் பிடித்துள்ள - தொருகை!
20✓
இகல்வீழ்கங் கணங்கொண்டு சுழல்கின்ற - தொருகை
எடுநாத மணியோசை ஒலிப்பிப்ப - தொருகை,
அகல்வான மழைமல்லல் பெயவைப்ப - தொருகை,
அரமாதர்க் கலர்மாலை அணிவிப்ப - தொருகை,
திகழ்கின்ற முகமாறின் செயற்கேற்ப - இயலாய்
திருத்தோள்கள் பனிரண்டும் தொழிலாற்றும் - இயலோய்!
மகிழ்கின்ற முகந்தோன்ற திருச்செந்தில் - இருந்தே
வரையற்ற அருள்செய்யும் நிலைபெற்ற - முருகா!
21திருச்செந்தூர் அமர்ந்த செவ்வேள்✓
உம்பர்பல் லியம்மு ழங்க ஊதுகொம் புகளி சைப்ப,
இம்பர்வெண் சங்கொ லிக்க, இடியென முரசி யம்ப,
அம்பொறி மஞ்ஞை வெற்றிக் கொடிமிசை அகவ, விண்வாய்
செம்புவி பராவச் சென்று திருச்செந்தில் அமர்ந்த செவ்வேள்!