முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
மருதமலை முருகன் குறம்9 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

மருதமலை முருகன் குறம்

30மருதமலை முருகனின் ஆறுமுகங்கள் செய்யும் நலங்கள்!✓
வாண்முகத்தாள் தெய்வானை மணங்கொண்ட - தோர்முகம்!
வானோர்க்குத் துயர்தீர்த்து வாழ்வளித்த - தோர்முகம்!
நாண்முகத்தாள் குறவள்ளி நயந்தணைந்த - தோர்முகம்!
நானிலத்தோர் தலைவணங்க நலமளிக்கு - மோர்முகம்,
மாண்மகத்த எளிவந்த மனங்காட்டு - மோர்முகம்!
மயல்,கோபம், அகம்பாவம் மாய்த்தருளு - மோர்முகம்,
பூண்மணித்தென் முடிமிளிரும் பூந்தாம - மார்பனே,
போற்றிதிருப் பேர்மருத மலையமர்ந்த - வேலவா!
31மருதமலை முருகனின் பன்னிரு கைகள் காட்டும் தொழில்கள்✓
அருளன்பின் உபகாரக் கொடைகாட்டும் - ஓர்கரம்!
அகந்தூய்மை மொழிவாய்மை நடைகாட்டு - மோர்கரம்
பொருட்செல்வம் நலம்,வாழ்வு பெறக்காட்டு - மோர்கரம்,
புகல்,நன்றி, விசுவாசம் உணர்வூட்டு - மோர்கரம்
தெருள்எய்தி இறைஞானத் திறங்காட்டு - மோர்கரம்!
செறிவேற்றம் தருங்கல்வி ஒளிகாட்டு - மோர்கரம்,
மருள்நெஞ்சம் உழலாமல் தடுத்தாளும் - ஓர்கரம்
மறத்திற்கும் அறத்திற்கும் முறைகூறும் - ஓர்கரம்!
32✓
நகையன்பு மனையின்ப மயம்நல்கும் - ஓர்கரம்
நலங்காக்கும் புதல்வர்கள் குலங்காக்கும் - ஓர்கரம்
பகைநின்று நமைக்காக்கக் கைகொடுக்கும் - ஓர்கரம்
பலவாறு சிறப்பாகத் தொழில்கூட்டு - மோர்கரம்
திகழ்கின்ற முகமாறின் தொழிற்கேற்ப - இசைவாய்
திருத்தோள்கள் பனிரண்டும் திகழ்வண்ண - இயலோய்!
மகிழ்கின்ற முகந்தோன்ற மருதமலை - இருந்தே
வரையற்ற அருள்பெய்யும் நிலைபெற்ற - முருகா!
33தகப்பன் சாமி!✓
வேல்களி லேஅவன் ஞானவேல்!
நூல்களி லேஅவன் காந்தநூல்!
மால்களி லேஅவன் பழனிமால்!
நாள்களி லேஅவன் விசாகநாள்!
மாதத்தி லேஅவன் கார்த்திகை!
வேதத்தி லேஅவன் சாமமறை!
பண்களி லேஅவன் மோகனம்!
விண்மீனி லேஅவன் கிருத்திகை!
பத்தரி லேஅவன் அருணகிரி!
புலவரி லேஅவன் நக்கீரன்
சாயலி லேஅவன் பவளமே!
சாமிக ளில்தகப் பன்சாமி!
34வாழ்த்து!✓
திங்கள் போல்முகம், கொண்டல் போல்முடி!
மின்னல் போலிடை! - விண்மகள்!
தங்கம் போலுடல், அன்னம் போல்நடை!
கன்னல் போல்மொழி - மண்மகள்!
பங்க யம்முகம், திண்ணி யம்புயம்,
பைந்த மிழ்ப்பதி - கந்தனே!
பொங்கு மங்களம் எங்குந் தங்கிடப்
போற்று வாம்சுபம் - வாழ்த்துவாம்!