முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
கீழ்த்திசை அருணனும்2 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

கீழ்த்திசை அருணனும்

2✓
கீழ்த்திசை அருணனும் கிளரொளி வீச
கிளி மயில் குயில் காகம் சேவல்கள் கூவ
காரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்
கடிமா மலருடன் ஏந்திய கையார்
தாழ்ந்திடு சென்னியர் தவமுடைப் பெரியோர்
தனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்
ஏழிசை பரவும் நற்செந்திலம்பரனே
எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே