முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
வானகத் தேவரும்9 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

வானகத் தேவரும்

9✓
வானகத் தேவரும் வழிபடும் நின்னை
மாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்
மான் இப்புவிதனில் வந்தமர் வாழ்வே
மன்னு செந்தூரா வழிவழி யடியோம்
ஊனகத்துலவி நின்றொளிரும் செந்தேனே
ஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்
ஞான அகத்தினில் நற்றொளியானாய்
நல்லமுதே பள்ளி எழுந்தருளாயே.