முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
பாற்குடம் காவடிபக்தர்கள்4 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

பாற்குடம் காவடிபக்தர்கள்

4✓
பாற்குடம் காவடிபக்தர்கள் ஒருபால்
பரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்
நாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்
நலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்
பாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்
பண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்
ஏற்குறும் ஒளிதிகழ் செந்திலமர்ந்தோய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே,