முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
செந்தில் நாயகன் வணக்கம்3 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

செந்தில் நாயகன் வணக்கம்

3✓
மயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கொள் மகானுள்ள முறைவோன்
பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
பனவர்க்கு மெய்த்தேவை நினைவின்கண் வைத்தேன்.
4✓
என்முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
யினையேறி னாரென்று நிலமேல் விளக்கித்
துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம்.
5✓
திரைபொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
திருமுன்பு வம்மின்க ளெனநின்ற வன்போல்
திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்
சேயோனை யிதயத்தி லேவைத் துளேனே.
6✓
இதிலேறி னோர்கலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரைமீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே.
7✓
பெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ ருயிர்செம்பொ னடிபற்று வோமே.