முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
அலங்காரம்4 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

அலங்காரம்

7கட்டளைக் கலித்துறை✓
திருவாரும் பொன்னக ரிந்திர னாதிய தேவர்தொழு
மருவாரும் வெட்சி புனையடி மாமயில் வாகனனைத்
தருவாருஞ் சோலை செறிசந் நிதிவளர் தற்பரனைப்
பரவார் வினையறு மோதெரி யார்பஞ்ச பாதகரே.
8✓
பெருவாழ் வடையுந் தவமுன் செயாதவிப் பேதமையேன்
கருவாழி தன்னைக் கடந்திட வேநற் கருணைசெய்வாய்
அருவா யுருவுரு வாயுரு வாய்மன் னரன்மதலாய்
திருவாழுஞ் சந்நிதித் தேவே யமர சிகாமணியே.
9✓
காலா யுதக்கொடி யோன்மயில் வாகனன் கைத்தலஞ்சேர்
வேலாயு தன்றிருச் சந்நிதி வாழ்பரன் மேவடியார்
பாலாய தம்புரி துருங் கழுதும் பகையரவுஞ்
சூலா யுதகர காலனும் பின்னிடத் தோன்றுவனே.
10✓
கோங்கரும் பன்ன முலையார்த மின்பைக் குறித்துமய
லோங்கு மடமன மேகதிர் காம வுயர்சந்நிதிப்
பாங்கமர் சேய்குகன் செவ்வேண் முருகன் பதம்புயத்தை
நீங்க லிலாது குறிப்பாய் வருமுத்தி நிச்சயமே.
11✓
செல்வத் திருச்சந் நிதிவாழ் முருகன்றன் சிற்றடிச்சீர்
கல்விப் பயிற்சி னாடொறு மோதிக் கடலுலகிற்
சொல்வைத்த புண்ணியர்க் கெட்டுணை யாயினுஞ் சோறிடுவார்
அல்லற் படாரடை வாரம ராபதி யந்தியத்தே.
12✓
சீரார் திருச்சந் நிதிவளர் தேவைத் தினந்தொழுதால்
வாராது தீயது நன்னருண் டாந்திரு மல்குநெஞ்சே
பேராத சீலம் பெறலா மதைவிட்டுப் பேதைமையிற்
சேரா வமயத்தை வாளா கழிப்பது சீரிதன்றே.
13✓
ஆதார மற்ற வெளியே னினதரு ளைப்பெறவே
நீதா னுஞ்சற்று மிரங்கிலை யேசந் நிதியில்வளர்
போதாரயன் முதற் புங்கவர் யாவரும் போற்றுதண்டைப்
பாதார விந்த முடையவ னேகிரு பாகரனே.
14✓
கதிர்காம மென்னுந் திருச்சந் நிதிவளர் கற்பகமே
முதிர்தீ நறுங்கனி யேகுற மாதுறு மொய்ம்பகலக்
கதிர்காம னார்செங் கடம்பணி வேணியன புயத்தாட்
பொதிர்தே மருந்து பதமெனக் கீந்தருள் புண்ணியனே.
15✓
எந்தாய் நமசெல்வச் சந்நிதி வாழு மிறைவநம
கந்தா நமசெங் கடம்பா நமசங் கரநுதற்கண்
வந்தாய் நமசெங்கண் மான்மரு காநம மாதுமையாண்
மைந்தா நமவென் பவரை யுறாது வருவினையே.
16✓
எண்ணற் கரும்பவ நண்ணுற் றலையுமெ னேழைநெஞ்சே
வண்ணப் பதம்பெற் றழிவின்றி வாழ வகையொன்றுகேள்
தண்ணுற்ற தண்டலை சூழ்செல்வச் சந்நிதிச் சண்முகனைக்
கண்ணிக் கசிந்து தொழுதிடு வாயது கைவருமே.
17✓
பேய்மன னேசெல்வச் சந்நிதி வாழ்பெரு மாள்கரமார்
காயயில் வேலுங் கொடிக்கோ ழியுமவன் கார்மயிலும்
ஆயவ னன்பர்க் குறுதுணை யேயவ னம்புயத்தாள்
மாய மலமறக் கும்மருந் தேயவை வாழ்த்துதியே.