முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
சி.ஆ. வேதநாயகன் தனிப்பாடல்9 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

சி.ஆ. வேதநாயகன் தனிப்பாடல்

27✓
இப்பவோ பின்னையோ மத்தியா னத்திலோ
இரவிபடு நேரமதிலோ
இரவிலோ பகலிலோ உதயகா லத்திலோ
எந்தெந்த நேரமதிலோ
அப்பிலோ தீயிலோ பேயிலோ காற்றிலோ
அரவுபெரு மிடியதனிலோ
ஆறாத புண்ணிலோ நடைநோவு தன்னிலோ
ஆயுதங் களினாலேயோ
செப்பரிய வீட்டிலோ காட்டிலோ மேட்டிலோ
தெருவிலோ திண்ணைதனிலோ
சிந்தைமய லில்லாம லெனதாவி பிரியவே
சித்தம்வைத் தெனையாளுவாய்
ஒப்புயர்வி லாதவென தப்பனே செப்பரிய
உண்மையுணர் வானசெல்வம்
உறைகின்ற சந்நிதியில் முறைநின்று காத்தருளும்
ஓங்கார வடிவேலனே.