முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
வேலாயுதக் கண்ணி10 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

வேலாயுதக் கண்ணி

✓
செல்வமுறு சந்நிதிவாழ் செவ்வேளடி போற்றி
யல்லலகற் றப்பணிந்தே னானைமுகத் தையாவே
✓
அஞ்சுக மாற்றியன்பர்க் காறுமுகங் காட்டவந்த
தஞ்சமலர்ப் பாதாபொற் சந்நிதி வேலாயுதனே
✓
கல்லாத மூடனுக்கோர் காட்சியுண்டோ மாட்சிசெறி
சல்லாபா போற்றுசெல்வச் சந்நிதி வேலாயுதனே
✓
ஆறுமுகத் தையாவே யன்பார்பொற் சந்நிதியாய்
தேறுமுக மாகவருள் செய்வாய் வேலாயுதனே
✓
துர்க்குணங்க ணீக்கியெனைச் சுத்தநிலை மேவவைப்பாய்
சற்குணத்தர் போற்றுசெல்வச் சந்நிதி வேலாயுதனே
✓
கண்கலக்கந் தீர்த்தென்னைக் காப்பா யெனவடைந்தேன்
விண்கலக்கந் தீர்த்தசெல்வச் சந்நிதி வேலாயுதனே
✓
கொல்லா விரதநிலை கூடியினி வாழ்வதென்றோ
சொல்லாய்பொற் சந்நிதியார் சோதிவே லாயுதனே
✓
ஏழா யெனவுலக மேசாமற் போதநெறி
தாழா தருள்செல்வச் சந்நிதிவே லாயுதனே
✓
துரையே யுனைப்பணிந்தேன் றுன்ப மெலாந்தீர்க்கத்
தரையார்பொற் சந்நிதியிற் சார்வேன்வே லாயுதனே.
✓
பூவனப்பொற் சந்நிதிவாழ் புண்ணியனே தொண்டுசெயாப்
பாவி யெனக்குமுண்டோ பண்புசொல் வேலாயுதனே
✓
போற்றுசெல்வச் சந்நிதியாய் பொற்பார் நக்கீரருக்குச்
சாற்றரிய துன்பம் தவிர்த்தாய் வேலாயுதனே
✓
கலியுகத்தின் தோஷமெலாங் காணாவே செல்வம்
பொலிசந் நிதியிலுனைப் போற்றிடில் வேலாயுதனே.
✓
கந்தாகுகா செல்வச் சந்நிதிவாழ் கர்த்தாவென்
சிந்தைநோய் தீருந் திறமருள் வேலாயுதனே
✓
நாய்போ லலைந்திளைத்தே னாதாபொற் சந்நிதியாம்
தாய்போலக் காக்கத் தகும்தகும் வேலாயுதனே
✓
கண்ணீர் சொரியவிரு கைகூப்பித் தெண்டனிட்டார்க்
கண்மைய னாவான் செல்வச்சந்நிதி வேலாயுதனே.