முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
மாலை5 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

மாலை

18✓
பூமேவு நற்சந் நிதிவாழும் புங்கவனைத்
தேமேவு செங்கடம்பார் திண்புயனைத் - தூமேவு
கூர்வே லனைப்புகழக் குன்றவினை தான்சிதையுஞ்
சூர்போ மென்னெஞ்சே துதி.
19✓
உடற்பிணிபோ முள்ளத் துறுதுயர்போம் பேய்போ
மடற்பகைபோ மின்மைபோ மையன் - றடக்கொற்ற
வேலன் றிருச்சந் நிதிவாழ் விசாகன்பொற்
காலைநெஞ்சே நித்தங் கருது.
20✓
தெய்வத்தா லன்றியொன்றுஞ் சேராதென உணர்ந்தோர்
மெய்வைத்த நூலால் விளக்கவும் - பொய்வைத்த
பொன்னா தியானாடும் புந்தியைநற் சந்நிதியின்
மன்னாவுன் றாணாட மாற்று.