முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
திருப்பள்ளியெழுச்சி6 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

திருப்பள்ளியெழுச்சி

21✓
தோத்திர மிசைத்திடு மடியவ ரொருபாற்
சுற்றியஞ் சலிசெயு மடியவ ரொருபாற்
காத்திடு கெனவரு மடியவ ரொருபாற்
கைகுவித் தேதொழு மடியவ ரொருபாற்
பூத்திரள் சிந்திடு மடியவ ரொருபாற்
பொற்புற வெங்குணு நிறையவந் தடுத்தார்
நேத்திர மணியன குருபர வளச்சந்
நிதியர சேபள்ளி யெழுந்தரு ளாயே.
22✓
மணிமயி லதன்மிசை நீயிருந் தாங்கு
மறிகடன் மிசையொரு கதிரவ னுதித்தான்
அணியுறு மரைமலர் நினதரு ளடைந்த
வன்பர்த முகமென விகசித மான
கணியுறு புனமதில் வருகுற மாது
காதலொ டணைதரு வாகுமுந் நான்கா
நிணமுறு படைநிசி சரர்தமை யடுசந்
நிதியர சேபள்ளி யெழுந்தரு ளாயே.