முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
பஞ்சாட்சரக்குருக்கள்2 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

பஞ்சாட்சரக்குருக்கள்

2✓
செல்வச்சந் நிதியென்னச் செய்வினையெ லாம்மாளும்
செல்வச்சந் நிதியென்னத் தீராநோய் தீர்ந்துவிடும்
செல்வச்சந் நிதியென்னச் சித்தியெலாங் கைகூடும்
செல்வச்சந் நிதிவேலோன் திருவருட் சிறப்பினாலே.
3பன்னிரு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்✓
அஞ்சுக மொழித்தெய்வ யானைவிளை யாடலுறு
மாறிரு புயாசலத்தா
யன்றில்வரை யொடுமாவி ரண்டுபிள வாகிட
வயிற்படை விடுத்ததீரா
செஞ்சரண வாரிசஞ் சூடுமடி யார்களைச்
சித்தியிற் சேர்க்குமீசா
செம்மறித் தகரூர் விசாககங் காசுத
சிறந்தமுற் கூடறன்னி
னஞ்சுசுந் தருள்சொக்க ரீந்தமெய்ப் பலகையிடை
நல்லுருத் திரசன்மனாய்
நண்ணிமெய்ப் பொருளைவிழி நீரினாற் காட்டியரு
ணாதகுக கார்த்திகேய
தஞ்சமொன் றிலேற்குணர் வளித்திரட் சித்திடுகை
சாமியுன் பாரமாகுஞ்
சந்நிதித் தலமேவு மையனே துய்யனே
சரவணோற் பவமெய்யனே.
4பன்னிரு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்✓
பசியினாற் பிணியினான் மிடியினா லிடியினாற்
பாந்தளாற் புட்கரத்தாற்
பகைவராற் கள்வராற் பில்லிசூ னியமதாற்
பாராளு மிறைவர்தம்மாற்
சுசியினாற் படையினான் மருத்தினான் மண்ணையாற்
சோர்விலா மிருகவகையாற்
றொடர்நமன் றூதரா லினையபிற வற்றினாற்
றுயருற்றி னைந்திடாது
வசியிலே னுய்ந்திடக் காப்பதுன் கடமைதென்
மலயமார் குறுமுனிக்கு
மறைமுதற் பொருள்செவி யுணர்த்து மாசாரிய
வரைசடாட் சரரூபனே
சசியினா சியதெய்வ யானைகுற மங்கைநற்
றவபரா பரசின்மய
சந்நிதித் தலமேவு மையனே துய்யனே
சரவணோற் பவமெய்யனே.