முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
சு. வெற்றிவேற்பிள்ளை8 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

சு. வெற்றிவேற்பிள்ளை

24நான்மணி மாலை✓
மாண்டும் பிறந்து மயங்குவ தன்றியுன் மாண்டியை
வேண்டுந் தவங்கள் புரிந்து பரசுக மேவிலனா
லாண்டும்விண் ணாட்டை யவனியை யென்னவிர் சந்நிதியாய்
மாண்டுங்கப் போதி லயனைச் சிறைவைத்த மன்னவனே.
25✓
சேவிக்க வேண்டுந் திருமால் வணங்கிடுந் தேவரசை
யாவிக் கருமுயி ரானநற் சன்னிதி யந்தணனை
வாவிக்குக் கீரிமலைத் தீர்த்த மாவையின் மன்னிணுவிற்
பூவிக்கு நல்லூர் தனிற்கந்த மாவனப் பொற்பதிக்கே.
26✓
தாங்கற் கரிய வினையான திங்குத் தளருமெனைத்
தாங்கற் கரியகலை யுணரேனைத் தகித்திடுமா
லேங்கற் கரிய மலச்சேட்டை தன்னையின் றின்மைசெய்வா
யாங்கற் கரியவ னுந்துதி சந்நிதி யந்தணனே.