முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
ச. வயித்தியலிங்கபிள்ளை பிள்ளைத் தமிழ்3 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

ச. வயித்தியலிங்கபிள்ளை பிள்ளைத் தமிழ்

5✓
நாக மரத்திற் பிரவாள நல்ல கொடியால் யாப்புறுத்து
நறிய முத்தம் பொதிபலகை நாட்டு மூசன் மிசைமட்வார்
மேக நிகர்த்த குழலவிழ வீசி யாட வத்துருமம்
விளங்கு முத்தா பலந்தரல்போல் வீயை யுகுக்கும் வளமுடைய
சோக மொழிக்குந் தொண்டைநகர்ச் சோதி யுறுவேற் கரமார்செஞ்
சுடரே தூய்மை யுறுமணியே சுருதி யோடு விண்ணவரும்
யோக விருடி களும்வணங்கு மொருவா முத்தந் தந்தருளே
யுயர்செல் வச்சந் நிதிவாழு மொளியே முத்தந் தந்தருளே.
6✓
வானிலுயர் வரைமீது திரிகரிக ளங்ஙனம் வந்துபடி முகில் கிழித்து
வாரியுண் டியினை வெகுண்டெடுத் துதறியே வருதடித் தைப்பிடித்தங்
கானபிடி மீப்போர்வை யென்னப் புனைந்தஃதை யன்புறச் செய்துமிகுகா
மாசையொடு கூடிவிளை யாடிடு வளஞ்செறியு மத்தொண்டை நாடதனில்வாழ்
மானமுறு வேலசுர ராஜகன் னிகைமேவு மருமமல விருளகற்று
மாண்புபெறு சோதியடி மன்னவிரு வினையொப்பு வருமடியர் தம்மையினிதே
வானவரு மேவல்பூரி யுயர்நிலையின் வைத்தருளு மஞ்ஞை வாகனவருகவே
வளமுற்ற சந்நிதியி லுளமுற்று வளருமொரு மழவுச் செவ் வேள்வருகவே.