முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
அத்தகு சிறப்புடைய8 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

அத்தகு சிறப்புடைய

8✓
அத்தகு சிறப்புடைய க்ருத்திகைத் தையலார்
அறுவர்முலை யமுதவாரி
அருமறை பழுத்தொழுகும் வாயார மொண்டுகொண்
டானந்த மழைபொழிதரும்
வித்தகக் கருணைமா முகிலென்று நம்பியென்
விடாய்தீர வந்தடுத்தேன்
வேறுபுக லில்லையு னடைக்கல மடைக்கலம்
வெட்சிது டியவிசாகா
சித்திரக் கலபமர கதநிற மயூரனே
தேவகுஞ் சரிமணாளா
சிங்கார வள்ளியிரு சிற்றடிகள் வருடிச்
சிவந்தபன் னிருகரதலா
சத்துருக் கசமுகத் தசுரசங் காரனே
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.