முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
திருவருள் கொழிக்குமுன்3 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

திருவருள் கொழிக்குமுன்

3✓
திருவருள் கொழிக்குமுன் சரவணப் பொய்கைத்
திருத்தந் திளைத்தாடியே
தீராத பழவினை யழுக்கைக் கழீஇவரும்
திருவாள ரைத்தரிசியா
உரிமையுட னடியேனு மச்சர வணப்பொய்கை
யுற்றுவந் தாடியுட்கொண்
டுன்னடிக ளேசரண மென்றோல மிடுமெனக்
குறுகுறை தவிர்த்தருளுவாய்
மருவளரு மலரோன் றருக்கினைக் கண்டுகர
மலர்கொண்டு தாக்கியவனை
வன்சிறை யிருத்தியுல கேழும் படைத்தநின்
வல்லாண்மை சொல்லவசமோ
தருவளரு மமரா வதிக்கரசை வாழ்வித்த
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.