முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
வாலைதிரி புரையான9 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

வாலைதிரி புரையான

9✓
வாலைதிரி புரையான சிவகாம சுந்தரிதன்
மைந்தனே நின்றுவசமா
மதுகையுறு காலாயு தத்தினுக் கேனுநீ
வாகனங் கொடுநடாத்தும்
வேலைநடு வடவையழல் விழிபொழிய வருமொரு
வியன்றகர் தனக்காயினும்
விடைகொடுத் தென்னுடைய பேரா வினைக்குன்றை
வேரோ டிடித்தருளுவாய்
கோலமலி தென்பரங் குன்றா வினன்குடி
குளிர்ந்தசெந் தூரேரகம்
கொடியாடு சோலைமலை குன்றுதோ றாடலும்
கொண்டருளி நின்றகுகனே
தாலமுழு துண்டபைங் கொண்டன்மே னியன்மருக
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.