முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
பன்னரிய வுன்னற்பு2 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

பன்னரிய வுன்னற்பு

2✓
பன்னரிய வுன்னற்பு தத்திருப் புகழைப்
பகர்ந்துகொண் டுன்றிருமலைப்
படியேறு மன்பர்வினை பொடியாகு மென்றுநிறை
மொழிமாந்தர் பகருவதுகேட்
டென்னுடைய பொல்லாத சஞ்சிதப் பிணியொழித்
தெனையும்வாழ் வித்தருளுகென்
றிரவுபக லுன்னருட் சந்நிதியில் வந்துமுறை
யிடுவேற்கி ரங்கியருள்வாய்
பொன்னிறக் காந்தளொடு செங்குவளை மலர்களும்
பொற்பமர் கடப்பமலரும்
பூத்தலர் குறிஞ்சியுஞ் சேர்த்தகூ தளமும்
புனைந்ததிரு மார்பழகனே
தன்னமு மனத்துய ரிலாதமர ரைக்காத்த
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.