முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
வெங்கன லுறைப்பவரு6 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

வெங்கன லுறைப்பவரு

6✓
வெங்கன லுறைப்பவரு பானுகோ பப்பதகன்
விட்டமா யைப்பகழிதான்
மிக்கமயல் பூட்டிக் கருங்கடற் கொண்டுபோய்
வீழ்த்திட வழுந்திநின்ற
துங்கவொளி மணிமகுட பாரநவ வீரரொடு
சோர்வரிய பூதர்களையுஞ்
சுடர்விடுங் குடுமியுடை யடலுடம் பிடிகொண்டு
தூக்கிய பராக்கிரமனே
பங்கமுறு கொடுவினைக் கடலிலே நெடுநாட்
படிந்துதடு மாறுமெனையும்
பயப்படே லென்றுநின் பன்னிரு விழிக்கருணை
பாலித் தெடுத்தருளுவாய்
சங்கடம் விலக்குமொரு தந்திமுக வற்கிளைய
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.