முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
ஓங்கார வுருவசின்1 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

ஓங்கார வுருவசின்

✓
ஓங்கார வுருவசின் மயவிமல வொளியாகி
யுலகமுழு வதுநிறைந்த
உண்மைப் பராபர நிராமய நிராலம்ப
உம்பர்கள் சிகாரத்னமே
ஆங்கார நீங்காத தீங்காண வத்தின்வரும்
அலகிலாப் பிறவிதோறும்
அடியேன்செய் கொடுவினை யளக்கருவ ரம்பினை
யளந்திடினு மளவுபடுமோ
வாங்காம லவ்வினை வருத்தலா லுன்றிருமுன்
வந்தபய மபயமென்றேன்
மயிலேறி வந்துதிரு மந்திர சடாக்கர
மருந்தரு டிருந்துமடியார்
தாங்காண முன்னின்ற சண்முகத் தெய்வமே
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.