முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
எண்ணிலுயிர் கட்கெலா7 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

எண்ணிலுயிர் கட்கெலா

7✓
எண்ணிலுயிர் கட்கெலா மன்றுதொட் டகலாமல்
என்றுமொரு தஞ்சமாயே
இருத்தலாற் கந்தனென வொருநாம முற்றனை
இருண்டமல மோகத்தினாற்
கண்ணிலா ருக்குமெய்க் கோல்கொடுத் தீர்ப்பதுன்
கருணைப் பெருக்கமன்றோ
காங்கேய வுனையன்றி மற்றொருதெய் வத்தைநான்
கனவிலு நினைத்தல்செய்யேன்
மண்ணிலடி யாரிரு வினைக்காடு வேரோடு
மடியவடி வேல்பிடித்து
மாறாத பேரின்ப வாழ்வைக் கொடுத்தருள
வாய்மையாங் கொடிகட்டியே
தண்ணருளின் வரமாரி பொழிகின்ற தெய்வமே
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.