முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
கண்டவர் களிக்குமுரு4 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

கண்டவர் களிக்குமுரு

4✓
கண்டவர் களிக்குமுரு கேசவுன் பெருமையைக்
கடவுட்சுனைக் குள்வளர்செங்
கல்லார முப்போது மலர்தந்து கமழ்தரும்
கந்தமே தூதாயுலாய்
எண்டிசையு ளார்க்குந் தெரித்தலாற் கொண்டாடி
யெல்லாரும் வந்துதொழுதுன்
இன்னருளை மொண்டுண்ண விந்நோயின் யானொருவன்
இடருற் றிளைப்பதழகோ
அண்டர்க ணடுக்கமுற வாயிரத் தெட்டண்டம்
ஆண்டிடு சூரதரன்
ஆண்மைதனை நீறாக்கி யவனையிரு கூறாக்கி
யாட்கொண்ட சயசிங்கமே
தண்டையொடு கிண்கிணிகள் கொஞ்சுசெஞ் சரணனே
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.