முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
அத்தான வச்சிங்கன்5 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

அத்தான வச்சிங்கன்

5✓
அத்தான வச்சிங்கன் வெருவச் சிரங்களை
யரிந்தவச் சிரமிருக்க
அக்கிரம மிக்ககிர வுஞ்சமலை பொடியாக்கும்
அயில்வேல் வலத்திருக்கச்
சித்தான வுன்னுடைய வாறக் கரங்களாம்
தெய்வமந் திரமிருக்கத்
தீண்டினும் பூசினும் பாபப் பசாசறத்
தீர்க்கும்வெண் ணீறிருக்க
இத்தார ணிக்குளொன் றறியாக் குழந்தைபோ
லென்னளவு நீயிருந்தால்
என்னாகு லத்தைத் துரத்தியெனை யுய்விக்க
வின்னமொரு தெய்வமுண்டோ
சத்தாகி முத்திக்கு வித்தாகி நின்றசிவ
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.