முருகன் App
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியமுனிவர்
நலமருவு மதுரைத்10 / 10
தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம் · சுப்பிரமணியமுனிவர்

நலமருவு மதுரைத்

10✓
நலமருவு மதுரைத் தமிழ்ச்சங்க மேற்புலவர்
நடுவீற் றிருந்தமுதல்வா
நக்கீரர் சொன்னமுரு காற்றுப் படைத்தமிழும்
நல்லருண கிரிநாதர்சொற்
புலமையுறு சித்திரச் சந்தப்ரவாகமும்
புனிதச் செவிக்குளார்த்த
புகழாள குறுமுனிக் காரணத் துட்பொருள்
புலப்படுத் தியகுரவனே
கொலைகளவு முதலான பாதக மெனக்குவெகு
கோடிக ளிருந்திடினுமுன்
கூர்மந் திரப்படையி னால்வீட்டி யெனதுளம்
குடிகொண் டிருந்தருளுவாய்
சலனமறு சருவபரி பூரண தயாநிதே
சரவணோற் பவகுமரனே
தணிகையங் கிரிவாச வரன்விரும் புபதேச
சகலபண் டிதராசனே.