முருகன் App
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
காப்பு1 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்

காப்பு

1✓
திருமகிழ் மாலவன் திருமார்பு நூலவன்
திசைதொறுங் காக்குமமரர்
தேவாதி தேவர்கள் தேடரும் சுடர்வனண்
செவியினைச் சாய்த்து நிற்கக்
குருவென விருந்துயர் பிரணவப் பொருளினைக்
குதலைமொழி யாலுரைக்கும்
குழவிமீ தன்பினால் பிள்ளைத் தமிழ்பாடக்
கொள்மதியில் நின்றருள்கவே
வெருவுமைம் பொறியெனும் வேடரை யடக்கியும்
வெவ்வினை யெனும்பொலாத
வேங்கையை விரட்டியும் விழைவெனும் அரக்கியை
வீட்டியும் அன்பினால்நின்
அருகுவந் தேத்திடும் அடியவ ரளித்திடும்
அருகுவந் தேற்றுவந்தே
அஞ்சலென் றருள்புரி யன்னையுமை மடியுறை
ஆனைமுகன் அடிசரணமே.
2சற்குரு வணக்கம்✓
உலகந் தழைக்க உயிர்க்கருணை
உயர்நன் னெறியாம் சன்மார்க்கம்
உளத்தில் சாதி பேதமிலா
ஒருமைப் பாடு வழிகாட்டிச்
கலகந் தவிர்த்தும் அருட்சோதி
கடவுள் ஒருவர் என்றுரைத்தும்
கந்தக் கோட்டச் சண்முகனைக்
கருத்திற் கொண்டு குருவாக
இலகும் அருள்பெற் றிறவாத
இன்ப மடைந்த வடலூர்வாழ்
இராம லிங்கப் பெருமானே
என்னுள் அமர்ந்த சற்குருவே
நிலவும் வள்ளி மலைமுருகன்
நிமலன் பிள்ளைக் கவிபாட
நெஞ்சில் வருவாய் தமிழ்தருவாய்
நின்றாள் சரணம் சரணமே.
3அவையடக்கம்✓
போதமெய்க் குருவினைப் புண்ணியர்க் கருளுதவிப்
புந்தியில் நிற்குமவனைப்
புவனங்கள் யாவையும் நொடியினில் தந்தவை
புரந்தழித் தாடுமரசை
வேதநெறி யாதகுஞ் சிதபாத னுதற்சுடர்
விழியினில் வருவேலனை
வேண்டுமடி யார்பதம் விளங்கிட மயிலினில்
விரைந்திடு மாறுமுகனை
ஏதமுறு பிறவியா மாற்றினி லெழுகிலா
தியையுமுவின் கடையடைவேன்
இனியசெந் தமிழினில் பிள்ளையந் தமிழ்பாடி
ஏத்துத லரிதானுமிங்
கோதமுறு மெழுகடலை யோரசகம் சுவரவே
உண்டிட முயலுமாபோல்
ஒன்றுமறி யாச்சிறுவன் ஞானிகள் நகைசெய
உரைத்தனன் பொறுக்குமாறே.