முருகன் App
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
வருகைப்பருவம்6 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்

வருகைப்பருவம்

53வேறு✓
வனத்திற் பாயா வேங்கை யுதிர்க்கும்
வண்டார் மலரெல்லாம்
வதியு மறையை வலிவேங் கைகண்
வளரு மெனவஞ்சிச்
சினத்தின் திருகும் களிற்றைப் புயலாய்த்
திரிய வுணர்மயிலோ
சிறகை விரித்துக் களியால் துள்ளும்
சிகரந் திகழ்பொற்பார்
புனத்தில் கிள்ளை பூவை விரட்டும்
புனிதத் தோகையவள்
புகலும் மொழியை விழையுங் களிறே
புவனேஸ் வரிகுமரா
முனத்தி லடியார்க் கருளும் முதல்வா
முத்தந் தந்தருளே
முத்தி நலந்தரு சத்திப் பொருப்பா
முத்தந் தந்தருளே.
54✓
அடியரும் மூவர் அமரர் மறைகள்
அணிசெய் திருவடியும்
அரதன மேகலை பீதாம் பரமும்
அசைந்தொளிர் திருவரையும்
கடிமலர் கடம்பம் நவமணி மாலை
கவினுறு திருமார்பும்
காத்தல் முதலெந் தொழில்செய் தணிபெறு
கதிர்வேற் கரமலர்கள்
துடியிடை வள்ளி சசிமகள் தழுவும்
தூரழி திருத்தோள்கள்
துலங்குயிர்த் திரளைப் புரக்குங் கண்கள்
தூமதி முகமாறு
முடிமணி யொளிரும் முருகா முதல்வா
முத்தந் தந்தருளே
முத்தி நலந்தரு சத்திப் பொருப்பா
முத்தந் தந்தருளே.
55✓
இனிக்கும் தமிழின் மணிப்பரல்கள்
இசைக்கும் கிளர்பொற் கிண்கிணியும்
இமைக்குங் கதிர்விட் டெண்டிசையும்
இலங்கக் கலிக்கும் சிலம்பினொடு
குனிக்கும் தண்டை சதங்கையிவை
கோயில் ஓவா திருந்தாடும்
கூத்தன் கூத்தின் இசைக்கொப்பக்
குலுங்கும் கஞ்சக் கருவியெனப்
பனிக்கும் மலர்ச்சீ றடிபெயர்த்துப்
பவனி வருக அடியேங்கள்
பவநோய் தீர்க்கத் தோகையின்மேல்
பரிந்து வருக பொதிகையமர்
முனிக்கும் அருண கிரிக்குமருள்
முதல்வா வருக வருகவே
மூலப் பொருளே வள்ளிமலை
முருகா வருக வருகவே.
56✓
வாதிட் டுழக்கித் தமக்குள்ளே
வருந்தி வாழ்நாள் வீண்போக்கி
வறிதே கழிக்கும் பல்சமய
வாதி பலரும் இடுமொலிபோல்
கோதிக் குவளை மலர்சூடும்
குறிய குழலார் கடைசியரின்
கூட்டம் விளைநெல் லரியொலியும்
குடக்கள் மடுத்துக் களிமள்ளர்
சாதி எருமைக் கடாவிடுத்துச்
சாரும் களத்தில் எழுப்பொலியும்
சாலி நிறைத்த பொதிவண்டி
சாற்றும் ஒலியும் கடலொலிபோல்
மோதித் திகழும் குன்றமர்ந்த
முதல்வா வருக வருகவே
மூலப் பொருளே வள்ளிமலை
முருகா வருக வருகவே.
57✓
அலைக்கும் சலதி யெழுந்தொளிரும்
அலர்மேன் மங்கை மஞ்சனநீ
ராட்டி மடிமேன் கிடத்திமுகை
யமுத மூட்டிக் குழல்திருத்திச்
சிலைக்கும் விழிக்கு மையெழுதிச்
செழிக்கும் தடமார் பணிவிளக்கிச்
செந்தா மரைநேர் சீறடிக்குச்
செம்பஞ் சூட்டி மெல்லிடையில்
இலைக்கும் வண்ணப் பட்டுடுத்தி
இனிக்கும் கனிவாய் முத்தமளித்
திதயங் களிக்க வளர்த்தெடுத்த
எழிலார் வள்ளி யம்மைதிரு
முலைக்குக் கனிந்து நினைந்துவரு
முதல்வா வருக வருகவே
மூலப் பொருளே வள்ளிமலை
முருகா வருக வருகவே.
58✓
கண்ணே கண்ணின் றொளிர்மணியே
கருத்தே கருத்தி னுறுபயனே
கடலே கடலின் எழுமமுதே
கனியே கனிச்சாற் றின்சுவையே
பண்ணே பண்ணின் மிகுமிசையே
பரமே பரத்தின் மேற்பறமே
பசுவே பசுவாட் கொளும்பதியே
பதும பீடத் தவன்மாலும்
விண்ணோ ரிடையும் காணரிய
விருந்தே அடிய ருளக்கமலம்
விரைந்தே யமர்ந்து வேண்டுவரம்
விளைகற் பகமே மூவருக்கும்
முன்னே விளங்கி யருள்புரியும்
முதல்வா வருக வருகவே
மூலப் பொருளே வள்ளிமலை
முருகா வருக வருகவே.
59வேறு✓
பரிநரி யாக்கியும் பணியணி தேக்கியும்
பலிபெறத் திரிந்தலைந்தும்
பத்தராய்ப் பெற்றவர் பித்தனே என்றுரை
பகர்ந்திட நாடிவந்தும்
வரியுரி சுற்றியும் சிரசிலும் இடத்திலும்
வனிதையர்க் குரிமைதந்தும்
வந்தவர்க் கொருவீடு வழங்கிநன் காட்டினில்
வாழ்ந்திடு மொருவளீன்ற
கரிமுகப் பெரியனின் பின்வரும் சிறுவனே
கலியுகம் காக்கவந்த
கண்கண்ட தெய்வமே! கற்றவ ருளத்தமர்
கடம்பமார் கந்தவேலே!
முரிமல வினையறுத் தடியருக் கருள்செய்ய
முளரியசைந் திடவருகவே
முத்தியை யுதவுபத சுத்தசத் துவஞான
முருகசர வணவருகவே.
60✓
கற்பகத் தருநிழற் கீழிருந் தரசுசெய்
கனகநாட் டொருதேவனும்
கண்ணுதல் திருவடிப் பணியினைச் சிரங்கொளும்
கனநிதிக் கிழவனாரும்
மற்புயத் திண்டிறல் காருடல் அந்தகன்
மதிரவி யாகுமமரர்
மறுகியோர் வீடின்றிச் சூர்சிறைப் பட்டுளம்
மாழ்கிடும் போதுவந்து
வெற்பினைப் பொடித்தெதிர் அற்பரா மவுணரை
வீழ்த்திட வேலைவிட்டே
விண்ணவர்க் களிசெயும் சண்முகக் கடவுளே!
வேண்டினார் வள்ளிமலையில்
முற்படப் பட்டவினை முற்றறுத் திடவல
முளரியசைந் திடவருகவே
முத்தியை யுதவுபத சுத்தசத் துவஞான
முருகசர வணவருகவே.
61✓
எழுவகை யாய்த்தொடர் எண்ணிலாம் பிறவியாம்
இருங்கட லழுந்துபிணியை
எரிதலைச் சூலமும் குருதிதோய்ப் பாசமும்
இருணிறக் கடாவூர்தியும்
வழுவிலா தறக்கடவுள் கொடுவரும் போதினில்
வாய்க்குமெய் அவத்தையதனை
வருபவத் துயரினு மொருமுத லெனப்படியும்
வல்வினையை மலமாசினைச்
கழுவிடும் புனிதமுறச் செய்திடும் உறுபிணி
கரைத்திடும் பேறனைத்தும்
களிசெயக் கூடுமோம் சரவண பவவெனக்
கனிவுட னணியுநீறே
முழுமதி முகத்து வெண்ணீற்றொளி பெருகசிறு
முளரியசைந் திடவருகவே
முத்தியை யுதவுபத சுத்தசத் துவஞான
முருகசர வணவருகவே.
62✓
கயலினை வென்றிரு குழையினைத் தாக்கிமீள்
கஞ்சநிகர் நெடுங்கண்களைக்
கச்செறிந் திருவரை எனவரை வலித்திடும்
கடலமுத கனதனத்தைப்
புயலினை யறலினைப் பழித்துத் திரண்டிடும்
பூக்கமழ் அளகமதனைப்
போற்றிடும் குலத்தொழில் புரிகொடு வில்லெனப்
பொற்புறும் பிறைநெற்றியை
உயவொரு புகலிலை யென்றுள மொடிந்துவீழ்
ஒண்மணித் திகழ்மினிடையை
உயர்வருள் அடியையுறு நம்பியர் தன்மகளை
உளநினைந் துருகும்வேளே
முயலகன் மேனட மிடுமரன் மகிழ்சுத
முளரியசைந் திடவருகவே
முத்தியை யுதவுபத சுத்தசத் துவஞான
முருகசர வணவருகவே.
63வேறு✓
நிலவு கிரண தரள வரிசை
நிகர நகையன் வருகவே
நிதமு மடிய ரிசையின் மகிழும்
நிறையு மதியன் வருகவே
அலகி லுயிர்க ளுருவில் மனதில்
அருளும் விழியன் வருகவே
அதிர எதிரும் பகையைச் சிதறும்
அமைய புயத்தன் வருகவே
கலக மிடுபல் சமயத் தவரும்
கருதும் ஒருவன் வருகவே
கழலைப் பணியக் கதியை யுதவு
கமல சரணன் வருகவே
அலரி னிலகு திருவி னினிய
அரிவை கொழுநன் வருகவே
அதிப முருக உதய கதிர
அமல வருக வருகவே.
64✓
நறவு பொழியு நளின முகங்கொள்
நதிபுத் திரனே வருகவே
நமனை யுதைத்துச் சிறுவன் புரக்கும்
நடனன் குமரன் வருகவே
துறவு மனத்தின் அறவர் புகழும்
துலங்கு கழலன் வருகவே
துனியு மிடியும் பகையும் வரையும்
துளைக்கு மயிலன் வருகவே
நிறமு மவிரும் சிறகு விரியும்
நெடிய மயிலன் வருகவே
நியம முனிவர் துதிசித் தருகு
நெகிழு மருளன் வருகவே
அறமும் மறமும் அணியுங் குறவர்
அரிவை மகிழ்நன் வருகவே
அதிப முருக உதய கதிர
அமல வருக வருகவே.