முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
கண்ணிலே ஒளியும்நீ2 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

கண்ணிலே ஒளியும்நீ

2✓
கண்ணிலே ஒளியும்நீ கருத்திலே பொருளும்நீ
காற்றும்நீ கனலும் நீயே
கடலிலே அலையும்நீ கரையிலே நிலையும்நீ
கடையும்தீ முதலும் நீயே
விண்ணும்நீ மண்ணும்நீ வேதத்தின் தலைவன்நீ
வெளியும்நீ ஒளியும் நீயே
மேலான தந்தைநீ மீட்டுகின்ற தாயும்நீ
விளையாடும் செல்வம் நீயே
எண்ணும்நீ எழுத்தும்நீ இரவும்நீ பகலும்நீ
எழுதாத உருவம் நீயே
இன்பம்நீ துன்பம்நீ இல்லைநீ உண்டுநீ
என்கின்ற வேதம் நீயே
பெண்ணும்நீ ஆணும்நீ பின்னுள்ள பொருளும்நீ
பேருலகில் எல்லாம் நீயே
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!