முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
வைதாரை வாழவைக்கும்7 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

வைதாரை வாழவைக்கும்

7✓
வைதாரை வாழவைக்கும் வடிவேலா நான்சொன்ன
வார்த்தையெலாம் பொய்யோ ஐயா
வண்டாடும் தாமரையில் நீஉறங்க நானிங்கு
மன்றாடி நிற்க லாமோ?
ஐயாவோ என்றழுதால் உனையன்றி எனையணைக்க
ஆரிங்கு உள்ளார் ஐயா?
ஆறுமுகப் பேரன்றி அடியேனைக் காப்பதற்கு
வேறுமுகம் உண்டோ ஐயா?
பொய்யான உலகத்தில் புழுவாகத் துடிக்கின்றேன்
புறந்தள்ளி நிற்க லாமோ?
புள்ளிமயில் இப்பாவி புகழ்ப்பாடல் கேட்டிருந்தும்
தள்ளியது பறக்க லாமோ?
வையாபுரி நாடாளும் வண்ணமயில் வாகனனே
மைந்தன்நான் வாட லாமோ?
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!