முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
தேன்சிந்தும் கவிகோடித்4 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

தேன்சிந்தும் கவிகோடித்

4✓
தேன்சிந்தும் கவிகோடித் தினந்தோறும் நான்பாடத்
திறவாத செவியும் உண்டோ?
செந்தமிழைக் கேட்டிருக்கும் திருமுருகன் சந்நிதியில்
சந்ததமும் திரைகள் உண்டோ?
மானழகு விழிமங்கை வள்ளிமயில் பஞ்சணையில்
மயங்கிநீ கிடப்ப துண்டோ?
மண்ணிலே நீசெய்த எண்ணிலா வித்தைகள்
வடிவங்கள் மறைவ துண்டோ?
ஞானத்தின் தலைவனென ஞாலத்தில் உனைச்சொல்லும்
நம்பிக்கை பொய்ப்ப துண்டோ?
நாடறியப் பிள்ளையைத் தந்தைதான் தள்ளிநின்றால்
நியாயங்கள் வாழ்வ துண்டோ?
வானவரைச் சிறைமீட்ட வடிவேலா உன்னைநான்
வையத்தில் விடுவ தில்லை
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!