முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
வேலாட மயிலாட1 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

வேலாட மயிலாட

1✓
வேலாட மயிலாட விழியாடப் புவியாட
வேதங்கள் எல்லாம் ஆட
விண்ணாட மண்ணாட விதியாட மதியாட
வீரமிகு சேவல் ஆட
சேலாடும் விழிமாதர் சிறந்தாடத் தினந்தோறும்
தெய்வானை தானும் ஆட
சிவனாட உவமையாடத் திகழ்யானை முகன்ஆடத்
தேவர்கோன் கூட்டம் ஆட
தோளாடக் காவடிகள் துதித்தாடத் தோகையாம்
துணைவள்ளிக் குறத்தி ஆட
சொல்லாடப் பொருள்ஆடப் பாட்டாட அதற்குள்ளே
சொல்லரிய ஜீவன் ஆட
மாலாட உனைப்பாடும் மனமாட மயிலேறி
வாழ்விக்க ஆடி வருவாய்
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!