முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
வாழ்வென்ற கடலிலே3 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

வாழ்வென்ற கடலிலே

3✓
வாழ்வென்ற கடலிலே மனமென்ற படகிலே
வடிவென்ற உடலைத் தாங்கி
வழியொன்றும் அறியாமல் வயிறென்ற கோட்டைக்கு
வகையான உணவு தேடி
பூவொன்று கூந்தலார் போகத்தில் நாளெல்லாம்
புதுக்கடல் நீந்தி நாளும்
பொருளென்ற போதையில் இருளென்ற உலகத்தில்
புலனைந்தும் மயங்கி நின்று
தாயென்று சேயென்று தானென்று பிறரென்று
தள்ளாத உறவு கொண்டு
தாளாத பாசத்தில் மீளாத உலகத்தைச்
சதமென்று நம்பி வாழ்ந்தேன்
வாவென்று மரணத்தின் வாயிலில் அழைத்திட்டேன்
வள்ளல்நீ மறுக்க லாமோ?
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!