முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
சங்கத்துத் தமிழ்கொண்டு10 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

சங்கத்துத் தமிழ்கொண்டு

10✓
சங்கத்துத் தமிழ்கொண்டு சாற்றாத போதிலும்
தாளினைகள் சாராத போதிலும்
சரவணப் பொய்கையில் ஆடாத போதிலும்
தைப்பூசம் காணாத போதிலும்
தங்குபுகழ் பழநிமலை ஏறாத போதிலும்
தணலேறி மிதிக்காத போதிலும்
தாழம்பூக் காவடிகள் தாங்காத போதிலும்
சஷ்டியிலே பாடாத போதிலும்
திங்களொரு நாள்விரதம் சேராத போதிலும்
திருக்கோவில் சுற்றாத போதிலும்
தென்பழநி கால்நடையாய் நடக்காத போதிலும்
திருவீதி புரளாத போதிலும்
மங்கையிரு பக்கத்தே வைத்தாளும் வடிவேலா
மைந்தனைநீ காக்க வேணும்
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!