முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
கோடியில் ஒருவனாய்ப்9 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

கோடியில் ஒருவனாய்ப்

9✓
கோடியில் ஒருவனாய்ப் பிறந்ததற்கு அழுவேனா
குறையுடன் பெற்றதற்கு அழுவேனா
கூந்தலார் கடலிலே விழுந்ததற்கு அழுவேனா
கூடிநான் பிரிந்ததற் கழுவேனா
வாடிய உயிர்களின் வாட்டத்திற் கழுவேனா
மாண்டவர் கூட்டத்திற் கழுவேனா
வஞ்சித்து வாழ்கின்ற மனிதருக் கழுவேனா
வயிறுகாய் பசியனுக் கழுவேனா
தேடியே கந்தனைச் செந்தூரின் கடலோரம்
தெரிசித்த பின்னாலும் இந்தச்
சிறுபிள்ளை அழுதிட்டுத் தேம்பிட நீயுமே
தெந்தினம் செய்ய லாமோ?
பாடிய பாட்டெல்லாம் செட்டிமக னாய்ப்பிறந்த
பாசத்தினா லன்றோ ஐயா?
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!