முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
கனியாத பருவத்து6 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

கனியாத பருவத்து

6✓
கனியாத பருவத்து கன்னிமலர் பறித்தேனா
கள்ளுண்டு மயங்கி னேனா
கண்ணீரில் ஏழைமகன் கைப்பொருளைக் கவர்ந்தேனா
கடன்வாங்கி வாழ்ந்திட் டேனா
வனிதையரின் பின்னாலே மனமகிழ்ந்து திரிந்தேனா
மாதாவை மறந்திட் டேனா
வாய்பேசா உயிர்களை வதைத்திட்டு வாழ்ந்தேனா
மனைவியினை வஞ்சித் தேனா
புனிதமுறு மன்றத்தில் பொய்சொல்லிப் பிழைத்தேனா
போகமிகத் தேடி னேனா
போதித்த ஆசானின் புலமையினைப் பழித்தேனா
பூமியை இகழ்ந்திட் டேனா
மனிதனெனப் பிறந்துநான் வையத்தில் செய்ததெலாம்
மன்னிக்க வேண்டும் ஐயா
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!