முருகன் App
வயலூர்ப்பத்து
இராம. இராமநாதன் கோனாப்பட்டு
மலராகப் பிறந்துநான்8 / 10
வயலூர்ப்பத்து · இராம. இராமநாதன் கோனாப்பட்டு

மலராகப் பிறந்துநான்

8✓
மலராகப் பிறந்துநான் பிஞ்சான வடிவாகி
வையத்தில் காயும் ஆனேன்
வாகான கனியாகி வளமான இளமைக்கு
மாதொன்று தேடி நின்றேன்
நிலவான அவளோடு உலகாள எண்ணிநான்
நெடிதான பொருளும் சேர்த்தேன்
நினைவோடும் உடல்தேய நேரான குணம்மாற
நித்தம்நான் நொந்து நின்றேன்
பலநாளும் பாய்வீழ்ந்து பழமாக உடல்சோர்ந்து
பாராத தனியன் ஆனேன்
பஞ்சாக விழிமூடப் பாற்சோறும் செ ல்லாதுன்
பாதத்தைச் சேர்ந்து விட்டேன்
வலமாக இடமாக வள்ளியுடன் தெய்வானை
வைத்தாளும் எங்கள் ஐயா
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!