முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
ஆறுமுகம் பன்னிரண்டு1 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

ஆறுமுகம் பன்னிரண்டு

1விருத்தம்✓
ஆறுமுகம் பன்னிரண்டு கையும் வேலும்
அலங்கார ஆபரணம் அணிந்த மார்பும்
திருமுகமும் வெண்ணீறு புனைந்த மெய்யும்
செகமெலாம் புகழ்படைத்த சுப்ர மண்யா
முருகாசர வணபவனே கார்த்தி கேயா
முக்கண்ணார் புத்திரனே உக்ர வேலா
இருவருமே உனைப்பணிந்தோம் பழனி வேலா
இதுசமயம் அடியாரை ரட்சிப் பாயே.